இன்றைய திருக்குறள்: 332

 

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

  -திருவள்ளுவர்.

மு.வரதராசனார் உரை:

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

Translation:

As crowds round dancers fill the hall, is wealth’s increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.

Explanation:

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theater; its expenditure is like the breaking up of that assembly.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!

 -மனோன்மணியம் பெ.சுந்தரனார்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விளக்கம்

Thamizh DNA

தமிழகம்


 நீலக் கடலை வண்ண ஆடையாக உடுத்திய நிலமகளுக்குப் பாரத நாடு முகமாக விளங்குகிறது. அதன் பிறை போன்ற நெற்றியில் தெற்குப் பகுதி ஒளிர்கிறது. அந்த நெற்றியிலே இட்ட திலகமாக தமிழ்நாடு திகழ்கிறது.அத்திலகத்திலிருந்து பரந்து செல்லும் நறுமணம் தான் தமிழ்த்தாய் (தமிழ் மொழி).

 அந்த நறுமணத்தின் மூலம் அனைத்து உலகும் இன்பமுறுகிறது.அதனால் அகில உலகிலும் புகழ்பெற்றுச் சிறக்க வீற்றிருக்கிறாள்.
பல உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காத்து ஒடுக்கும் பரம்பொருள் போல் இன்னும் என்றும் இளமையாகவே இருக்கிறாள் தமிழ்த்தாய்.

 தமிழ்த்தாயின் மயக்குறு மக்களே கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் துளுவும்.தமிழ்மொழி பரம்பொருள் போன்றது. ஆதலால் ஆரிய மொழி போல் உலக வழக்கொழியாதது, இறவாதது.

 என்றும் இளமைப் பொலிவுடன் வாழ்வது; வான்புகழ் பெறுவது. உன் கன்னித்தன்மையைப் புகழ்ந்து, எங்கள் செயல்மறந்து, உன் வயப்பட்டு உலகினர் அனைவருமே வாழ்த்துகின்றோம்.

தமிழ்தாய் வாழ்த்து – இசை அமுது

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

 இது புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடல், எழுதியவர் பாரதிதாசன். இவர் எழுதிய இசை அமுது என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பாடல் இதுவாகும்.

பொழுது

பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். தமிழா்கள் பருவநிலைக்கேற்ப பொழுதுகளுக்குப் பெயாிட்டுக் குறித்தனா். பொழுது இரண்டு வகைப்படும் என்று அகத்திணை இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது. அவை பெரும்பொழுது, சிறுபொழுது என்பனவாகும்.

ஓா் ஆண்டின் ஆறு பருவங்களைக் குறிப்பது பெரும்பொழுது. ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளைக் குறிப்பது சிறுபொழுதாகும்.

பெரும்பொழுது

பெரும்பொழுதுதிங்கள்
காா்காலம்ஆவணி, புரட்டாசி
குளிர்காலம்ஐப்பசி, காா்த்திகை
முன்பனிகாலம்மாா்கழி, தை
பின்பனிகாலம்மாசி, பங்குனி
இளவேனில்சித்திரை, வைகாசி
முதுவேனில்ஆனி, ஆடி

சிறுபொழுது

சிறுபொழுதுநேரம்
காலைகாலை 6.00 மணிமுதல் 10.00 மணிவரை
நண்பகல்10.00 மணிமுதல் 2.00 மணிவரை
எற்பாடு2.00 மணிமுதல் 6.00 மணிவரை
மாலை6.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை
யாமம்இரவு 10.00 மணிமுதல் 2.00 மணிவரை
வைகறைஇரவு 2.00 மணிமுதல் காலை 6.00 மணிவரை

திணைகளுக்குரிய பொழுதுகள்

திணைபெரும்பொழுதுசிறுபொழுது
குறிஞ்சிகுளிர்காலம், முன்பனிக்காலம்யாமம்
முல்லைகாா்காலம்மாலை
மருதம்ஆறு பெரும்பொழுதுகள்வைகறை
நெய்தல்ஆறு பெரும்பொழுதுகளஎற்பாடு
பாலைஇளவேனிற் காலம்,முதுவேனிற்காலம்,பின்பனிக்காலம்நண்பகல்

 

தமிழ் மாதங்கள் பெயர்கள்

01.சித்திரை  (mid-April to mid-May)
02.வைகாசி (mid-May to mid-June)
03.ஆனி (mid-June to mid-July)
04.ஆடி (mid-July to mid-August)
05.ஆவணி (mid-August to mid-Sep)
06.புரட்டாசி (mid-Sep to mid-Oct)
07.ஐப்பசி (mid-Oct to mid-Nov)
08.கார்த்திகை (mid-Nov to mid-Dec)
09.மார்கழி mid-Dec to mid-Jan
10.தை mid-Jan to mid-Feb
11.மாசி (mid-Feb to mid-March)
12.பங்குனி (mid-March to mid-April)
 1. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
  (இன்னிசை வெண்பா)

புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.

 

பொருள் விளக்கம்

கால்நடைகள் மேயும் பசும்புற்கள் நிறைந்த பகுதிகளிலும், உண்ணும் பொருள் விளையும் விளை நிலத்திலும், நல்ல காரியங்களுக்கு பயன்படும் பசும் சாணத்தில் மேலும் , சுடுகாட்டிலும், பலர் செல்லும் வழியிலும், பலர் பயன்படுத்தும் நீர் நிலைகளிலும், வழிபாடு செய்யும் இடங்களிலும், ஒருவர் இளைப்பாற நிழல் தரும் மரத்தின் கீழும்,

ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் இடங்களிலும், உரமாக, வீட்டு பொருள்கள் தூய்மை செய்ய பயன்படும் சாம்பலின் மேல் ஆகிய 10 இடங்களில் நல்ல உணர்வுடையவர்கள் எச்சில் உமிழ்தல் , மலம், சிறுநீர் கழித்தல் செய்ய மாட்டார்கள்.

– ஆசாரக்கோவை

ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
…. பலவென் றுரைக்கிற் பலவேயாம்
அன்றே யென்னின் அன்றேயாம்
…. ஆமே யென்னின் ஆமேயாம்
இன்றே யென்னின் இன்றேயாம்
…. உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
…. நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!

   – கம்பர்

பொருள்:

 • கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்;
 • வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார்.
 • கடவுளுக்கு இன்னின்ன தன்மைகள் இல்லை என்றால் இல்லைதான்.
 • மாறாக கடவுளிடம் இன்னின்ன தன்மைகள் உள்ளன என்றால் உள்ளனவே.
 • கடவுளே இல்லை என்றாலும் இல்லைதான்.
 • கடவுள் உள்ளதாகக் கருதினால் உள்ளவனே.
 • இப்படி எல்லாத் தன்மையாகவும் தோன்றும் கடவுள் நிலை பெரிதே.
 • சிற்றறிவுடைய நம்மால் இறைநிலையை உணர்ந்து பிழைக்கும் வழி யாதோ!

பாடல் : கம்ப இராமாயணம் – (யுத்த காண்டம்)

பதிவுகள்

 • இலக்கியம்
 • தகவல்கள்
 • கதைகள்
 • பாரதியார் கவிதைகள்
புறநானூறு புறம் –
50. கவரி வீசிய காவலன்!

புறம் – 50. கவரி வீசிய காவலன்!

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 50. கவரி வீசிய காவலன்!பாடல் ஆசிரியர்: மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின் மகன் ...

தகவல்கள் மின்புத்தக வடிவங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் – Best eBook Formats

மின்புத்தக வடிவங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் – Best eBook Formats

பிரபலமான மின்புத்தக வடிவங்கள் பற்றி தெரியுமா? PDF, Word, ePub, Mobi, AZW/AZW3 எந்த வகை மின் புத்தகம் நான் பயன்படுத்த வேண்டும் ? Kindle Books ...

பஞ்சதந்திரக் கதைகள் இளைஞனைக் காப்பாற்றிய நண்டு 5-14

இளைஞனைக் காப்பாற்றிய நண்டு 5-14

பஞ்சதந்திரக் கதைகள் இளைஞனைக் காப்பாற்றிய நண்டு - பகுதி - 514. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு ஓர் இளைஞன் தன் ஆசிரியனின் வேலையாக ஒருமுறை வெளியூர் ...

பல்வகைப் பாடல்கள் வசன கவிதை | காட்சி

வசன கவிதை | காட்சி

இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.

0
58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

திருவிளையாடற் புராணம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த ...

0
உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…..

உலக நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் மற்றும் ...

0
கொரோனா மன அழுத்தம்: பாலியல் துணையை தேடிக் கொள்ள அறிவுறுத்தும் நெதர்லாந்து

கொரோனா தொற்று நோய் உலகம் முழுக்க பரவிவரும் இந்த காலகட்டத்தில், நெதர்லாந்தில் திருமணமாகாதவர்கள் மற்றும் துணையில்லாதவர்கள் (சிங்கிள்ஸ்) ஒரு சிறந்த பாலியல் ...

0
51. சங்கப் பலகை தந்த படலம்

திருவிளையாடற் புராணம் 51. சங்கப் பலகை தந்த படலம்51. சங்கப் பலகை தந்த படலம் மதுரையில் சங்கம் இருந்தது என்றும், நாற்பத்தெட்டு புலவர்கள் இருந்து தமிழ் ...

0
நியூயார்க்கில் கரோனா இறப்பு குறைகிறது

நியூயார்க்கில் கரோனா இறப்பு விகிதம் முந்தைய வாரங்களை ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது. இது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய முன்னேற்றம் என்று நியூயார்க் ஆளுநர் ...

0
ஈஃபிள் டவர், வெள்ளை மாளிகை போன்ற வெளிநாட்டு கட்டட மாதிரிகளுக்கு தடை விதிக்கும் சீனா – காரணம் என்ன?

ஈஃபிள் டவர், இத்தாலிய கிராமங்கள், தேம்ஸ் நகரம் போன்ற பல வெளிநாட்டு கட்டட மாதிரிகளை சீனாவில் நம்மால் காண இயலும். ஆனால் உள்ளூர் கட்டட அமைப்பை பிரபலபடுத்த சீன ...

0
13. கடல் சுவற வேல் விட்ட படலம்.

திருவிளையாடற் புராணம் 13. கடல் சுவற வேல் விட்ட படலம்.13. கடல் சுவற வேல் விட்ட படலம். உக்கிர குமாரன் நீதி நெறி கருதி ஆட்சி செய்து வந்தான்; வளங் ...

0
53. கீரனைக் கரை ஏற்றிய படலம்

திருவிளையாடற் புராணம் 53. கீரனைக் கரை ஏற்றிய படலம்53. கீரனைக் கரை ஏற்றிய படலம் நக்கீரனின் அஞ்சாமை போற்றப்படுகிறது. சிவனே ஆயினும் குற்றம் குற்றமே ...

0
முடக்க நிலைக்கு எதிராக ஸ்பெயினில் நடந்த கார் ஓட்டும் போராட்டம் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து கார் ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Show next

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password