அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம்:
அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் என்பது, நிலவில் மனிதன் முதல் முதலில் கால் பதிக்க காரணமாக இருந்த ஒரு விண்வெளிபயணம் ஆகும். அப்பல்லோ 11 விண்கலம் Saturn V ராக்கெட் மூலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 16-ல் ஏவப்பட்டது. இந்த அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் திட்டம் அப்பல்லோ திட்ட வரிசைகளில் மனிதன் சென்றதில் 5 வது ஆகும்.
அப்பல்லோ என்ற பெயர் கிரேக்கக் கடவுளைக் குறிக்கும்.

- ஜுலை 20ல், “ஈகிள்” என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, “கொலம்பியா விண்வெளி ஓடத்தில்லிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே(Rocket) இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினும் ஈகிளுடன் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினர்.
- சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கிய அந்த இடம் பின்னர் “அமைதித் தளம்” (Tranquility Base) என அழைக்கப்பட்டது.
- இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிந்தபின், ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார்; “இது [ஒரு] மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்.” (one small step for [a] man, one giant leap for mankind)
- 21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் இயந்திரத்தை இயக்கி (சந்திர தொகுதியின் இரண்டாம் நிலை), மீளும் கொலம்பியாவுடன் (rocket) இணைந்தது.
- விண்வெளிவீரர்கள்ஜூலை 24ல், பூமிக்குத் திரும்பியபோது, பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார்கள்.

ஆம்ஸ்ட்ராங்கின் சந்திர மேற்பரப்பில் மனிதன் முதல் அடி வைத்த தருணம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு நேரடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
Apollo Lunar Module: Eagle (அப்பல்லோ சந்திர தொகுதி)
![]() | |
கழுகு: (இடம் அமைதித் தளம்) ஜூலை 20, 1969 அன்று | |
வகை | அப்பல்லோ சந்திர தொகுதி |
தயாரிப்பாளர்கள் | Grumman |
Construction number | LM-5 |
முதல் பயணம் | Apollo 11 |
உரிமை | NASA |
பயன்பாட்டில் இருந்தது | July 16–21, 1969 |
அப்பல்லோ 11

அப்பல்லோ 11 விண்கலத்தில் 3 பாகங்கள் இருந்தன:
- Command module
மூன்று விண்வெளி வீரர்களுக்கான கேபினுடன் ஒரு கட்டளை தொகுதி (command module), பூமிக்கு திரும்பிய ஒரே பகுதி இதுதான்.
- Service module
சேவை தொகுதி (service module) , இது கட்டளை தொகுதிக்கு உந்துவிசை, மின் சக்தி, ஆக்ஸிஜன் மற்றும் நீர் ஆகியவற்றை வழங்குவதற்கு;
- Lunar Module
சந்திர தொகுதி (Lunar Module) (Pilot: Edwin Buzz Aldrin Jr)
சந்திர தொகுதி 2 நிலைகளைக் கொண்டிருந்தது:
- குழுவை சந்திரனில் தரையிறங்குவதற்கான ஒரு நிலை மற்றும்
- விண்வெளி வீரர்களை மீண்டும் சந்திர சுற்றுப்பாதையில் வைக்க ஒரு ஏறும் நிலை (சந்திரனின் தரை பகுதியில் இருந்து சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செல்ல).
இத்திட்டத்தின் கட்டளைக் கூறு (command module) வாஷிங்டன், டி.சி. யிலுள்ள தேசிய ஆகாய மற்றும் விண்வெளி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் சந்திரக் கூறு ஜூலை 21 1969ல் வீசப்பட்டது. நிலவில் அது விழுந்த இடம் இதுவரையில் தெரியவரவில்லை.
அப்பல்லோ 11 விண்வெளிப் பயண குழு

ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.
பிரதம குழு
- நீல் ஆம்ஸ்ட்ராங் · Commander
- பஸ் ஆல்ட்ரின் · Command Module Pilot
- மைக்கேல் காலின்ஸ் – Lunar Module Pilot
காப்புப் பணியாளர்கள் (Backup Crew):
- ஜிம் லோவெல் – Commander
- வில்லியம் ஆண்டர்ஸ் · Command Module Pilot
- பிரெட் ஹைஸ் – Lunar Module Pilot
விண்கலம்:
- CM-107 கொலம்பியா · LM-5 கழுகு
மீட்பு கப்பல்கள்:

அப்பல்லோ 11 PPK (Personal Preference Kit)
அப்பல்லோ 11 ஜூலை 16, 1969-ல் 39A விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. எட்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு ஜூலை 24, 1969ல் அன்று திரும்பியது.
சந்திரன் தரையிறங்கும் பணிக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தவிர , ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் வீட்டிலிருந்து நினைவுச் சின்னங்கள் அடங்கிய தனிப்பட்ட விருப்பத்தேர்வு கிட் (PPK) இருந்தது.
ஆலிவ் கிளை முள் (Olive branch pin):

ஜேம்ஸ் ஆர். ஹேன்சன் எழுதிய “முதல் மனிதன்: நீல் ஏ. ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கை” என்ற நூலின் படி, ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணத்தின்போது ஒரு தங்க ஆலிவ் கிளை முள் கொண்டு சென்றார், அது பின்னர் அவரது மனைவி ஜேனட்டிற்கு கொடுத்துவிட்டார்.
Buzz ஆல்ட்ரின்
ஒரு சாலிஸ், ரொட்டி மற்றும் ஒயின் (A chalice, bread and wine) டெக்சாஸின் வெப்ஸ்டரில் (Webster) உள்ள பிரஸ்பைடிரியன் (Presbyterian) தேவாலயத்தில் தேவாலய மூப்பராக ஆல்ட்ரின் இருந்தார், அவரும் ஆம்ஸ்ட்ராங்கும் சந்திரனின் மேற்பரப்பில் நடக்கக் காத்திருந்தபோது, ரொட்டி மற்றும் ஒயின் ஆகியவற்றைக் கொண்டு வந்தனர்.
மைக்கேல் காலின்ஸ்
ஒரு ரேஸர் மற்றும் ஷேவிங் கிரீம், அப்பல்லோ 11 இன் போது மைக்கேல் காலின்ஸ் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள்
அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் – உறுப்பினர்கள்
இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக (Commander) நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக (Lunar module pilot) மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.

குழு உறுப்பினர்கள்
விமான இயக்குநர்கள் (Flight Directors)
Name | Shift | Team | Activities |
Clifford E. Charlesworth | 1 | Green | Launch and extravehicular activity (EVA) |
Gerald D. Griffin | 1 | Gold | Backup for shift 1 |
Gene Kranz | 2 | White | Lunar landing |
Glynn Lunney | 3 | Black | Lunar ascent |
Milton Windler | 4 | Maroon | Planning |
பிற முக்கிய பணியாளர்கள்
அப்பல்லோ 11 பணியில் முக்கிய பங்கு வகித்த பிற முக்கிய நபர்கள்.
பெயர் | செயல்பாடுகள் |
ஃபாரூக் எல்-பாஸ் | புவியியலாளர் , சந்திரனின் புவியியலைப் படித்தார் , தரையிறங்கும் இடங்களை அடையாளம் கண்டுகொண்டார், பயிற்சி பெற்ற விமானிகள் |
கர்ட் டெபஸ் | ராக்கெட் விஞ்ஞானி , ஏவுதளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை மேற்பார்வையிட்டார் |
ஜேமி மலர்கள் | விண்வெளி வீரர்களுக்கான செயலாளர் |
எலினோர் ஃபோரக்கர் | விண்வெளி வழக்குகளை வடிவமைத்த தையல்காரர் |
ஜாக் கர்மன் | கணினி பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் |
எல்டன் சி. ஹால் | அப்பல்லோ வழிகாட்டல் கணினி வன்பொருள் வடிவமைப்பாளர் |
மார்கரெட் ஹாமில்டன் | உள் விமான கணினி கணினி மென்பொருள் பொறியாளர் |
ஜான் ஹவுபோல்ட் | பாதை திட்டமிடுபவர் |
ஜீன் ஷூமேக்கர் | கள புவியியலில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்த புவியியலாளர் |
பில் டிண்டால் | ஒருங்கிணைந்த பணி நுட்பங்கள் |
அப்பல்லோ 11 விண்வெளிப் பயணத்திட்டக் குறிப்புகள்
- ஜுலை 20ல், சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, “ஈகிள்” என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, “கொலம்பியா”விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினும் ஈகிளுடன் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினர்.
- சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்புப் புகைப்படங்களில் காணப்பட்டதுபோலன்றி, இறங்க உத்தேசித்திருந்த இடம் எதிர்பார்த்ததிலும் கூடிய பாறைப் பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்கக் கட்டுப்பாட்டைக் கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப் பிரதேசம் பின்னர் “அமைதித் தளம்” (Tranquility Base) என அழைக்கப்பட்டது.
- இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிந்தபின், ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார்; “இது [ஒரு] மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்.” (அவர் பேசும்போது, “ஒரு” என்ற சொல் விடுபட்டு, பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டாலும், சில வரலாற்றாசிரியர்கள், தாராள மனப்பாண்மையுடன், இது ஆம்ஸ்ட்ரோங்கின் தவறு என்பதிலும், தொலைத் தொடர்புக் கோளாறு என்றே கூறுகின்றனர்.)
- 21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் இயந்திரத்தை இயக்கி, மீளும் கொலம்பியாவுடன் இணைந்தது. விண்வெளிவீரர்கள்ஜூலை 24ல், பூமிக்குத் திரும்பியபோது, பெரும் வீரர்களாக வரவேற்கப்பட்டார்கள்.

இத்திட்டத்தின் கட்டளைக் கூறு வாஷிங்டன், டி.சி. யிலுள்ள தேசிய ஆகாய மற்றும் விண்வெளி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் சந்திரக் கூறு ஜூலை 21 1969ல் வீசப்பட்டது. நிலவில் அது விழுந்த இடம் இதுவரையில் தெரியவரவில்லை.
அப்பல்லோ 11: 50-வது ஆண்டுவிழா
நிலவில் கால்தடம் பதித்த 50 ஆண்டு தினத்தை முன்னிட்டு அப்பல்லோ 11 விண்வெளிப் பயணத்தை பற்றிய சுவாரசிய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
- அப்பலோ 11 ராக்கெட் 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நிலவை சென்றடைந்தது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.
- இன்றைய பண மதிப்பில் 200 பில்லியன் டாலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும்.
- அப்போலோ 11 பயணத்தில் ஆம்ஸ்டிராங்கும், அவருடன் நிலவில் நடந்த பஸ் ஆல்டிரினும் அணிந்திருந்தவை மெக்கானிக்கல் கைக்கடிகாரங்கள் ஆகும்.
- இந்த குழுவினர் 76 மணி நேரத்தில் பூமியிலிருந்து சந்திரனுக்கு 240,000 மைல்கள் பயணம் செய்தனர்.
- அப்பல்லோ 11 விண்வெளி ராக்கெட்டை ஏவிய சாட்டர்ன் V ராக்கெட் 203,400 கேலன் மண்ணெண்ணெய் எரிபொருள் மற்றும் 318,000 கேலன் திரவ ஆக்ஸிஜன் மூலம் எரிந்து விண்கலத்தை 38 மைல் தொலைவு வானத்தில் உயர்த்தியது.
- பூமிக்குத் திரும்பியதும், அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் ஆபத்தான நோய்க்கிருமிகளால் பாதிக்கபட்டிருந்தால் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

- நாசாவின் Lunar Reconnaissance Orbiter கேமரா நிலவில் எஞ்சியிருக்கும் ஆறு அமெரிக்க கொடிகளின் புகைப்படங்களை எடுத்தது.
அப்பல்லோ திட்டங்கள்
அப்பல்லோ திட்டம் என்பது 1961–1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும்.
- அப்பல்லோ 1– விமானிகள் குழு சோதனை முயற்சியொன்றிபோது அழிந்தனர் (பிப்ரவரி 21, 1967)
- அப்பல்லோ 4– சற்றேர்ண் V தூக்கி பரிசோதனை * (நவம்பர் 9, 1967)
- அப்பல்லோ 5– சற்றேர்ண் IB தூக்கி பரிசோதனையும் நிலா கூறும். * (ஜனவரி 22–23, 1968)
- அப்பல்லோ 6– சற்றேர்ண் V தூக்கியின் ஆளில்லாப் பரிசோதனை * (ஏப்ரல் 4, 1968)
- அப்பல்லோ 7– முதலாவது ஆளேற்றிய அப்பல்லோ பறப்பு (அக்டோபர் 11-22, 1968)
- அப்பல்லோ 8– நிலவுக்கு முதலாவது ஆளேற்றிய பறப்பு (டிசம்பர் 21-27, 1968)
- அப்பல்லோ 9– நிலா கூற்றின் முதலாவது ஆளேற்றிய பறப்பு (மார்ச் 3-13, 1969)
- அப்பல்லோ 10– நிலவைச் சுற்றிய,நிலா கூற்றின் முதலாவது ஆளேற்றிய பறப்பு (மே 18–26, 1969)
- அப்பல்லோ 11– நிலவில் முதல் மனிதனின் இறக்கம். (ஜூலை 16-24, 1969)
- அப்பல்லோ 12– நிலவில் முதலாவது அச்சொட்டான இறக்கம் (நவம்பர் 14-24, 1969)
- அப்பல்லோ 13– வழியில் ஒட்சிசன்தாங்கி வெடிப்பினால் குலைந்துபோன இறக்கம். (ஏப்ரல் 11–17, 1970)
- அப்பல்லோ 14– அலன் ஷெப்பேட், சந்திரனில் நடந்த முதல் அசல் விண்வெளி வீரரானார். (ஜனவரி 31 – பிப்ரவரி 9, 1971)
- அப்பல்லோ 15– நிலவு உலவு வாகனத்துடன் முதலாவது பயணம். (ஜூலை 26 – ஆகஸ்ட் 7, 1971)
- அப்பல்லோ 16– சந்திர உயர் நிலத்தில் முதல் இறக்கம். (ஏப்ரல் 16-27, 1972)
- அப்பல்லோ 17– நிலவுக்குக் கடைசி ஆளேற்றிய பறப்பு. (டிசம்பர் 7-19, 1972)
குறிப்பு: * அப்பல்லோ 4, 5, 6 ஆகியவை ஆளில்லா அப்பல்லோ விண்வெளிப் பயணம் திட்டம் ஆகும்.
மேலும் பிற நல்ல தகவல்கள் படிக்க முகப்பு பக்கம் செல்லவும்.