- 1

அரிஞ்சய சோழன்

666 0

அரிஞ்சய சோழன்

கோப்பரகேசரி வர்மன் அரிஞ்சய சோழன் இடைக்காலச் சோழர் மரபைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தக சோழன்னின் மகன், கண்டராதித்த சோழனின் தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான். இவனுக்கு அந்த ஊரில் பள்ளிப்படை அமைக்கப்பட்டது.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.

956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. இவனைத் தொடர்ந்து சுந்தர சோழன் அரியணையில் அமர்ந்தான்.

அரிஞ்சய சோழன்

ஆட்சிக்காலம்கி.பி. 956 – 957
titleகோப்பரகேசரி வர்மன்
தலைநகரம்தஞ்சாவூர்
அரசி
பிள்ளைகள்சுந்தர சோழன்
முன்னவன்கண்டராதித்தர்
பின்னவன்சுந்தர சோழன்
தந்தைமுதலாம் பராந்தக சோழன்
பிறப்புதஞ்சாவூர்
இறப்புகி.பி.957 ஆற்றூர்

 

பொன்னியின் செல்வனில் அரிஞ்சய சோழன்

அரிஞ்சய சோழன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பராந்தக சோழ மன்னனின் புதல்வரும், இராஜாதித்தர் மற்றும் கண்டராதித்தரின் சகோதரன் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற அரிஞ்சய சோழனைச் சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

பராந்தக தேவரின் புதல்வர் அரிஞ்சயர். சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை விரட்டுவதற்காகப் பெரும் படையை எதிர்த்துப் போர் புரிந்தவர். அப்போரில் படுகாயமுற்ற போதும், கண்டராத்தரின் மறைவுக்குப் பின் சோழ அரசராகப் பதவியேற்றார். மிகக் குறுகிய காலமே அரசராக இருந்தார். பின் உயிர்துறந்தார். இவருக்குப் பின் இவரது மகன் சுந்தர சோழர் சோழப் பேரரசை ஆண்டார்.

அரிஞ்சய சோழன் பள்ளிப்படை கோயில்

வேலூர் மாவட்டம் திருவலம் நகருக்கு அருகே மேல்பாடி எனும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரில், பொன்னை ஆற்றங்கரையில் எதிர் எதிராக இரண்டு அழகிய சிவாலயங்கள் உள்ளன. அதில் ஒன்று சோழ மன்னன் அரிஞ்சய சோழனுக்காக அமைக்கப்பட்ட பள்ளிப்படை கோயில். இந்தக் கற்றளியின் கல்வெட்டு ஒன்று “ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுப்பித்த கற்றளி” என்ற வரிகளுடன் காணப்படுகின்றது. படைவீடு அமைத்து போரில் ஈடுபட்டிருந்த பொழுது பொன்னை ஆற்றங்கரையில் மறைந்த தனது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு முதலாம் இராஜராஜன் அமைத்த பள்ளிப்படை கோயில் தான் இது. இந்தக் கோயிலிலும் இதற்கு எதிராக அமைந்துள்ள மற்றொரு கோயிலிலும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

Source link

Related Post

- 3

முதலாம் இராஜராஜ சோழன்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
முதலாம் இராசராச சோழன் அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த…
- 5

சுந்தர சோழன்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
சுந்தர சோழன் இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவராக விளங்கியவர் இராசகேசரி வர்மன் சுந்தர சோழர். இவர் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டார்.…
- 9

கண்டராதித்தர்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
கண்டராதித்தர் இராசகேசரி வர்மன் கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன்…
- 11

விசயாலய சோழன்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
விசயாலய சோழன் பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் கோப்பரகேசரி வர்மன் விசயாலய சோழன் ஆவார்.…
- 13

உத்தம சோழன்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
உத்தம சோழன் உத்தம சோழன், கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவார். கண்டராதித்தர் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவர் பதவிக்கு வரவில்லை,…

உங்கள் கருத்தை இடுக...