பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்
# | பிறமொழி சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | அகங்காரம் | தன்முனைப்பு, இறுமாப்பு, செருக்கு, ஆணவம் யான் எனல் |
2 | அகசு | பொழுது, பகல் இராப்பகல் கொண்ட நாள் |
3 | அகடவிகடம் | வேறுபட்டது, குறும்பு மாற்று |
4 | அகதி | ஏதிலி வறியவன் சமயம் வேலமரம்,தில்லைமரம். போக்கற்றவர் கதியிலி அனர்த்தங்கள், அரசியல் போன்ற காரணங்களால் சமூகத்தின் நிலைமை மோசமாகும்போது தன் நாட்டில் இருந்து வெளியேறி மற்றொரு நாட்டில் அடைக்கலம் தேடுபவர் |
5 | அகந்தை | இறுமாப்பு |
6 | அகம்பாவம் | தற்பெருமை செருக்கு ஆணவம் திமிர் |
7 | அகரிஷணம் | வெறுப்பு துக்கம் |
8 | அகிஞ்சனன் | தரித்திரன் |
9 | அகிம்சை | அறவழி கொல்லாமை இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை |
10 | அக்கணம் | அப்பொழுது |
11 | அக்கிரகாரம் | பார்ப்பனச்சேரி பார்ப்பனர்கள் வசிக்கும் இடம் |
12 | அக்கிரமம் | கொடும் செயல்,அட்டூழியம், ஒழுங்கின்மை, முறைகேடு |
13 | அக்னி | நெருப்பு, தீ |
14 | அங்கச்சோமன் | இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம், உள்ளறை,கடுமரம்,சலதாரை,சேறு,பத்துமுழத்தளவு,பரப்பு, பொரிகாரம், முற்றம், வெண்காரம், மதகு. ஒருவன் பிறக்கும்போது அவனுடைய தேகஉறுப்பில்நிற்பதாகக் கணிக்கப்படுஞ் சந்திரன்.அங்கணம் |
15 | அங்கத்தினர் | உறுப்பினர் |
16 | அங்கத்துவம் | உறுப்புரிமை |
17 | அங்கப்பிரதட்சனம் | வலம் வருதல் |
18 | அங்கம் | உறுப்பு |
19 | அங்கவீனம் | மாற்றுவலு |
20 | அங்கீகாரம் | ஒப்புதல் |
21 | அசத்தை | பொய் |
22 | அசம்பாவிதம் | முரணிகழ்வு நடக்கக்கூடாதது சம்பவிக்கக் கூடாது |
23 | அசரீரி | விண்னொலி |
24 | அசவ்கரியம் | இடையூறு |
25 | அசாக்கிரதை | விழிப்பின்மை |
26 | அசாத்தியம் | நடக்கமுடியாத இயலாதது சாத்தியம் அல்லாதது |
27 | அசீரணம் | சமியாமை செரியாமை |
28 | அசுத்தம் | அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை |
29 | அசுபக்கிரகம் | ஒருநோய். தீயகிரகங்கள், அவை:ஆதித்தன், செவ்வாய், சனி, அபரபக்கசந்திரன், இராகு, கேது, ஆதித்தனுடன் கூடிநின்ற புதன் என்பன. அசுபக்கிரியை – அமங்கலைக்கிரியை.அசுபதம்பவாதம் |
30 | அசூசை | பொறாமை |
31 | அஞ்சனம் | மை, கறுப்பு, இருள் |
32 | அஞ்சலி | (அக) வணக்கம் |
33 | அஞ்ஞாதம் | மறைவு அறியப்படாதது |
34 | அட்சயபாத்திரம் | அருகாக்கலம் |
35 | அட்சரம் | ஒலிப்பு எழுத்து தாளத்தின் காலப் பகுப்பு,இடம் |
36 | அதமம் | தீங்கு |
37 | அதி | மிகு; மிகை மிகுதிப்பொருளதோரிடைச்சொல் |
38 | அதிகபட்சம் | உயர்ந்த அளவு மேல்வரம்பு |
39 | அதிகம் | கூடுதல் மிகுதி நிரம்ப |
40 | அதிகாரி | மேலாளர் உயர் அலுவலர் |
41 | அதிகாலை | விடியற்காலை, விடியல், வைகறை விடிவதற்கு முன் உள்ள பொழுது |
42 | அதிசயம் | விந்தை வியப்பு |
43 | அதிதி | விருந்தினர் காசி பப்பிரமாவின்மனைவிகளிலொருத்தி |
44 | அதிபதி | முதல்வன், தலைவன் உங்களை ஆட்சி செய்பவரைக் குறிப்பிடலாம் |
45 | அதிபர் | முதல்வர், உரிமையாளன், உரிமையாளர் தலைமை பொறுப்பில் இருப்பவரைக் குறிப்பிடலாம். |
46 | அதிர்ஷ்டம் ,அதிஷ்டம் | குருட்டாம்போக்கு யோகம் |
47 | அதிர்ஷ்டவசமாக | நல்லவேளையாக |
48 | அதிஸ்டம் | நல்வாய்ப்பு நல்லூழ் |
49 | அதீத | விஞ்சிய, (மிகையினும் விஞ்சியது) |
50 | அதீதம் | மிகை |
51 | அதைரியம் | துணிவின்மை துணிவு இல்லத நிலை |
52 | அத்தாட்சி | உண்மையை நிரூபிக்கும் சான்று |
53 | அநந்தம் | முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது |
54 | அநர்த்தம் | அழிவு, கேடு |
55 | அநாதி | தொடக்கமிலி, தொடக்கமின்மை |
56 | அநாதை | ஆதரவிலி, துணையிலி, யாருமிலி உற்றார், உறவினர், நண்பர்கள் இல்லாதவர்கள் |
57 | அநாவசியம் | தேவையற்றது |
58 | அநியாயம் | முறையின்மை, முறைகேடு |
59 | அநீதம் | நீதியின்மை |
60 | அநீதி | நடுவின்மை, முறைகேடு நியாயத்திற்கும் நீதிக்கும் புறம்பானது |
61 | அநுகூலம் | சார்பு |
62 | அநுக்கிரகம் | அருள் |
63 | அநுட்டித்தல் | கைக்கொள்ளல், கடைப்பிடித்தல் |
64 | அநுதாபம் | இரக்கம், அருளல், இரங்கல் |
65 | அநுதினம் | நாள் தோறும் |
66 | அநுபல்லவி | தொடுப்பு |
67 | அநுவாதம் | அநுவாதம் செய்பவன்,சமணரிலொருவன். சம்மதம், நிந்தித்தல், முன்னர்க்கூறிய ஒருபொருளை ஓர் நிமித்தத்தாற் பின்னுமெடுத்துக் கூறுதல்.வாதிகூறிய பொருளை நீ யிவ்வாறுகூறினையெனக்கண்டனஞ் செய்யும்பொருட்டுப் பிரதிவாதியுங்கூறல்.அநுவாதி |
68 | அநுஷ்டித்தல் | கைக்கொள்ளல், கடைப்பிடித்தல் |
69 | அநேகம் | பல |
70 | அந்தகாரம் | அடர்ந்த இருள் கும்மிருட்டு |
71 | அந்தரங்கம் | மறைவடக்கம் (மறைமுகம்) |
72 | அந்தரம் | ஆதரவற்ற நிலை சங்கடம் அவசரத் தேவை பரபரப்பு தரக்குமேல் பிடிமானம் இல்லாத நடு வெளி |
73 | அந்தரவெளி | |
74 | அந்தஸ்து | தகுதி, செல்வாக்கு, நிலைமை |
75 | அந்தி | மாலை பகல் பொழுது முடியும் நேரம் |
76 | அந்திய காலம் | முடிவுக்காலம், இறுதிக்காலம் |
77 | அந்தியக்கிரியை | ஈமவினை, இறுதிக்கடன் |
78 | அந்தியம் | முடிவு, சாவு |
79 | அந்நியன் | அறிமுகம் இல்லாதவன் வேற்றாள் வேறுபட்டவன் அயலான் |
80 | அந்நியம் | வேறுபாடு, வேற்றுமை தன்னுடையதாக இல்லாதது,தனக்குச் சொந்தம் இல்லாதது உறவுக்கு வெளியே இருக்கும் நிலை |
81 | அந்நியர் | பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர் |
82 | அந்யேந்யம் | நெருக்கம் |
83 | அனந்த சயனம் | அறிதுயில் |
84 | அனுகூலம் | நன்மை |
85 | அனுக்கிரகம் | அருள் செய்தல் |
86 | அனுசரணை | உறுதுணை உதவி ஒத்தாசை |
87 | அனுசரி | பின்பற்று(தல்) கடைபிடி(த்தல்) |
88 | அனுஜன் | தம்பி |
89 | அனுட்டித்தல் | கடைப்பிடித்தல் |
90 | அனுதாபம் | இரக்கம் |
91 | அனுபந்தம் | பினினிணைப்பு, பிற்சேர்க்கை |
92 | அனுபவம் | பட்டறிவு |
93 | அனுமதி | சம்மதித்தல் இசைவு |
94 | அனுமானம் | ஊகம் உய்த்துணர்வு |
95 | அனுஷ்டி | கடைப்பிடி, கைக்கொள் |
96 | அன்னம் | சோறு |
97 | அபகரி | கைப்பற்று கவர்ந்துகொள் |
98 | அபகரித்தல் | பறித்தல், கவர்தல் |
99 | அபத்தம் | அர்த்தமற்றது பொய், பொம்மை |
100 | அபயம் | அடைக்கலம் |