ஆசாரக்கோவை Free Download PDF
ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து கூறுகின்றது.
ஆசாரக்கோவை Free Download
- ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் PDF Free Download
PDF – ( PC & Tab , iPad)
- ஆசாரக்கோவை விளக்கம் ePub Free Download
ePub – ( iPhone, iPad & android Phones )
- ஆசாரக்கோவை விளக்கம் Mobi Free Download
Mobi – ( Kindle Reades, amazon Kindle app for iPhone and android )
போன்ற வடிவங்க்களில் ஆசாரக்கோவை நூல் உங்களுக்காக …
தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் ஒரு சிறந்த சான்றாகும்.
வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எப்படிச் சாப்பிட வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், எந்த திசையில் படுக்க வேண்டும், நீராடும் முறை என்ன, பெரியவர்களுடன் பழகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடையாக இந்த நூல் உள்ளது.
மேலும் மலம், சிருநீர் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.
உண்ணக்கூடாத முறைகள் பற்றி ஆசாரக்கோவை விளக்கம்
- கிடந்து உண்ணக் கூடாது.
- நின்று உண்ணக்கூடாது.
- கட்டில் மேலமர்ந்து உண்ணக்கூடாது.
- வெளியில் நின்றவாறு உண்ணக்கூடாது.
- மிக விரும்பி உண்ணக்கூடாது
என உண்ணக்கூடாத முறைகள் விளம்பப் படுகின்றன. அந்திப்பொழுதில் உண்ணல் ஆகாது என 29 ஆம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உணவுண்ணும் பந்தியில் தம்மினும் பெரியவர் / சான்றோர் அமர்ந்திருப்பாராயின்
- அவருக்கு வலப்புறம் அமரக்கூடாது;
- அவருக்கு முன் உண்ணகூடாது.
- அவருக்கு முன் எழக்கூடாது.
- அவர்களை நெருக்கி அமரலாகாது
எனப் பெரியோர் பால் இருந்து அருந்தும் முறையை ஆசாரக்கோவை சுட்டுகிறது.
மனைவியைக் கூடக்கூடாத பொழுதுகள்
மூன்று நாட்களின் வரும் பன்னிரண்டு நாளும் மனைவியை பிரியவேகூடாது என்பதை,
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறிவாளர் துணிவு (42)
மனைவியைக் கூடக்கூடாத பொழுதுகளாக உச்சிப்பொழுது, இடையாமம், காலை, மாலை, இருகடவுளர்க்குமுரிய நாட்கள், அட்டமி, பிறந்த நாள் ஆகிய நாட்களை ஆசாரக்கோவை குறிப்பிடுகிறது.
ஆசாரக்கோவை பற்றி மேலும் படிக்க >>>
தேடல் தொடர்பான தகவல்கள் :
ஆசாரக்கோவை உரை, ஆசாரக்கோவை புத்தகம், ஆசார கோவை தெளிவுரை, ஆசார கோவை pdf, ஆசாரக்கோவை பாடல், ஆசாரக்கோவை ஆசிரியர், ஆசாரக்கோவை pdf download, ஆசாரக்கோவை மூலமும் உரையும், aasara kovai urai, aasarak kovai, asara kovai tamil book buy online, asara kovai with meaning pdf free download