ஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா?
பெண்களை பொறுத்தவரை ஆண்களுக்கே தெரியாமல் அவர்களை ரசிக்கும் குணமுடையவர்கள். ஆனால் அதைப் பற்றி வெளியில் கூறமாட்டார்கள்.
அதுவே மற்றொரு பெண்ணிடம் பேசும் போது, அவனின் ஹேர் ஸ்டைல் நன்றாக இருந்ததே, டிரஸ் கோட் நன்றாக இருந்ததே என்று அவர்கள் ரசிக்கும் ஆணைப் பற்றியெ அதிகம் பேசுவர்.
அப்படி பெண்கள் தாங்கள் முதன் முதலில் ஆண் ஒருவரை சந்திக்கும் போது, ஆண்களிடம் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்களை பார்ப்போம்.
நகங்கள்
பெண்கள் நகம்வளர்க்கும் பழக்கும் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் நகத்திற்கு அழகழகான நைல் பாலிஷ்களை போட்டு கொள்வர்.
அதுவே அவர்கள் பார்க்கும் ஆண்கள், நகம் அதிகமாக வைத்திருந்தால் பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்காதம். அதிலும், அந்த நகம் சுத்தமாக இல்லாமல் இருந்தால்,அந்த ஆணிடம் அவர்கள் பழக கூட விரும்பமாட்டார்களாம்.
தோரணை
பெண்கள் ஆண்களிடம் இருந்து தோரணையை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். அந்த தோரணையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் தான், இவர் நம்மை பாதுகாப்பாக வைத்து கொள்வாரா என்பதை தீர்மானிக்க உதவுகிறது.
இது அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் உணர்வைத் தருகிறது. நீங்கள் எப்போதும், அவர்களை பார்க்கும் போது, ஒரு பதட்டமாகவும், ஆர்வகோளாறாகவும் காட்டிக் கொள்ளாதீர்கள்.
எனவே ஒரு பெண்ணை பார்க்க செல்கிறீர்கள் என்றால் உங்கள் தோரணையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆடை
நீங்கள் அணிந்திருக்கும் ஆடையை பெண்கள் நிச்சயமாக கவனிப்பார்கள். நீங்கள் அந்த உடைய எப்படி அணிந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒரு பிட்டான உடை அணிந்திருந்தால், அது அவர்கள் கவனிப்பை பெறும், அதுவே நீங்கள் இழிவாக உடையணிந்திருந்தால், அது நிச்சயமாக கவனிக்கப்படாது.
எனவே நீங்கள் மறுநாள் பெண் ஒருவரை முதன் முதலில் பார்க்க செல்கிறீர்கள் என்றால், அதற்கு முந்தைய நாள் மாலை சரியான அளவான ஆடையை தேர்ந்தெடுத்து வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் பெண்களின், மதிப்பெண் பட்டியிலில், இந்த ஆடைக்கு தான் அதிகளவு மதிப்பெண் கொடுக்கப்படுகிறதாம்.
தலைமுடி
பெண்கள் முதன் முதலில் கவனிக்கும் விஷயம், ஆண்கள் தலைமுடி தான், ஆண்கள் பொதுவாக தலை முடியை அழகாக வைத்து கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவர். ஒரு சில ஆண்கள் தலைமுடியில் என்ன இருக்கப் போகிறது என்று நினைப்பர்.
ஆனால் பெண்கள் உண்மையிலே, ஆண்களின் தலைமுடியை ரசிப்பார்கள். அவர்கள் உங்கள் உடலில் இருக்கும் மிகச் சிறந்த அம்சமாக தலைமுடியை கவனிக்கின்றனர்.
தாடி
பெண்களுக்கு தலைமுடியை தொடர்ந்து தாடியும் மிகவும் பிடிக்கும். ஆனால் அது ஏனோ தானோ என்று இருக்க கூடாது. அதை நன்றாக அலங்கரித்து, கவரும் விதமாக சுத்தமாக நாம் வைத்து கொண்டால், பெண்களை கவரலாம்
மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
ஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா? Source link