ஏப்ரல் 16, 2020
SaveSavedRemoved 0
ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ
அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூ சென்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ
அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
தாலாட்டுப் பாடல்கள் – தமிழ் DNA
ஆராரோ அரிரரோ-1
SaveSavedRemoved 0
Tags: தமிழர் பாடல்கள்தாலாட்டு