ஆள் தேடுதல் – நாட்டுப்புற பாட்டு

தெருத்தெருவாய் தேடி வாறான் – ஏலங்கிடி லேலோ
திண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1

சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து – ஏலங்கிடி லேலோ
சயிக்கினையும் செஞ்சுவாறான் -ஏலங்கிடி லேலோ 2

முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்துப் பார்த்து -ஏலங்கிடி லேலோ
முணுமுணுன்னு பேசிவாறான் -ஏலங்கிடி லேலோ 3

ஆளுப் பிடிக்க ஏழுமணிக்கு -ஏலங்கிடி லேலோ
ஆலாப் பறந்து வாறான் -ஏலங்கிடி லேலோ 4

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் -ஏலங்கிடி லேலோ
அட்டுவான்சும் கொடுத்துவாறான் -ஏலங்கிடி லேலோ 5

ஆளுக்கொரு அரிவாள்தானும் -ஏலங்கிடி லேலோ
ஆறுமுகக் கயிறுரெண்டும் -ஏலங்கிடி லேலோ 6

சும்மாடும் சேர்த்தெடுத்து -ஏலங்கிடி லேலோ
சுறுசுறுப்பாய்ப் போறாங்களாம் -ஏலங்கிடி லேலோ 7

நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA

ஆள் தேடுதல்

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this: