இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை எளியமுறையில் கரைக்கனுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க
இன்று பலரும் இடுப்பு பகுதியில் சதையை குறைக்க பெரும்பாடு பட்டு கொண்டு வருகின்றார்கள்.
இதற்காக ஜிம், கண்ட கண்ட டயட்டுகள் என்பவற்றை பின்பற்றி வருகின்றார்கள்.
இதனை தவிர்த்து வீட்டில் இருந்தப்படியே எளிய முறையில் இடுப்பு பகுதியில் காணப்படும் சதையை குறைக்க முடியும்.
“அர்த்த நாவாசனம்” என்ற யோகாசனம் இதற்கு பெரிதும் உதவி புரிகின்றது.
அந்தவகையில் தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
- முதலில் தரையில் படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். பின்னர் படத்தில் உள்ளபடி கால்களை மடக்க வேண்டும்.
- பின்னர் கைகளை கால் முட்டியின் அருகே கொண்டு வர வேண்டும். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.
- இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
- இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.
…
இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை எளியமுறையில் கரைக்கனுமா? இந்த பயிற்சியை செய்து பாருங்க Source link