இடுப்பு வலி, கால் வலியை குணமாக்கனுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்து பாருங்க
பொதுவாக வேலைசுமை காரணமாக அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் இடுப்பு வலி, கால் வலியும் ஒன்றாகும்.
பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.
இதற்காக உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.
இதற்கு நிரந்த தீர்வு வேண்டும் என்றால் ஒரு சில உடற்பயிற்சிகளை வீட்டில் இருந்தப்படியே செய்தாலே போதும்.
தற்போது அவற்றில் வீட்டில் செய்யக்கூடிய எளியப்பயிற்சிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
கெட்டில்பெல் டெட் லிப்ட் (Kettlebell Dead lift)
pinterest
தரையில் கால்களை அகட்டி நின்று கொள்ளவும். இரண்டு கால்களுக்கு நடுவே கெட்டில் பெல்லை வைக்கவும்.
பின்னர் மெதுவாக குனிந்து இடுப்பை பின்னோக்கி தூக்கியவாறு அடிவயிறை உள்ளிழுத்துக் கொண்டு கெட்டில்பெல்லின் பிடிகளை பிடித்து நிற்கவும்.
இடுப்பிலிருந்து முதுகுவரை தட்டையாக இருக்க வேண்டும். இப்போது தசைகளை இறுக்கமாக்கிக்கொண்டு கெட்டில்பெல்லை மெதுவாக தூக்கி முழங்கால்களுக்கு அருகில் வைத்துக் கொண்டு நேராக நிற்கவும்.
இதுபோல் குனிந்து, நிமிர்ந்து 12 முதல் 15 முறை செய்ய வேண்டும்.
உடலில் அதிக தசைகளை உபயோகித்து செய்யும் இந்தப் பயிற்சியால் கால்கள், பின்புறம், கீழ்முதுகு போன்ற முக்கிய தசைகள் வலுவடைகின்றன.
அதிக ஆற்றலை செலவழிப்பதால் விரைவில் உடலின் கொழுப்பை கரைக்க முடியும்.
Kettlebell windmill
Image Source: POPSUGAR Photography
தரையில் தோள்களுக்கு நேராக காலை விரித்து நிற்கவும். இடது கையில் கெட்டில்பெல்லை பிடித்துக் கொண்டு தலைக்கு மேல் தூக்க வேண்டும்
. இடுப்பை வலப்புறமாக வளைத்து வலது கையால் வலது முழங்காலுக்குக்கீழ் பிடித்துக் கொள்ளவும். இப்போது உங்கள் உடல் ‘T’ வடிவில் இருக்கும்.
மெதுவாக பழைய நிலைக்கு திரும்பவும். இதேபோல் மறுபக்கம் செய்ய வேண்டும். இந்தப்பயிற்சியை 6 முதல் 8 முறை செய்யலாம்.
குனிந்து கைகளை காலின் கீழ்பகுதி வரை சென்று தொடுவதால் இடுப்பு நன்றாக வளைந்து கொடுக்கிறது. இதனால் இடுப்பு எலும்புகள் வலுவடைகின்றன.
மேலும் இடுப்பு தசைகள் நெகிழ்ச்சியடைவதோடு, பின்தொடை மற்றும் கெண்டைக்கால் தசைகள் வலுவடைகின்றன.
இடுப்பு எலும்புகள் மற்றும் கால் எலும்புகளுக்கு நல்ல அசைவுத்தன்மை கிடைப்பதால் இடுப்புவலி, கால்வலி, கீழ்முதுகு வலி மற்றும் தொடைவலிகள் நீங்கும். அதேவேளையில் தோள்பட்டை எலும்புகளும் வலுவடைகின்றன.
…
இடுப்பு வலி, கால் வலியை குணமாக்கனுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்து பாருங்கSource link
சிறுநீரகம் சிறப்பாக இயங்க இந்த ஆசனத்தை மட்டும் செய்தாலே போதுமாம்! உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது…
உங்கள் உடல் கச்சிதமாக இருக்க தினமும் 10 நிமிடம் இந்த உடற்பயிற்சிகளை செய்தால் போதும் கொரோனா எதிரொலியால் தற்போது மக்கள் வீட்டில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் வெளியில்…
தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து பாருங்க.. இந்த நோய் எல்லாம் பறந்தோடி விடுமாம்! உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான்…
2 வாரத்தில் உடல் எடையை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க
உடற்பயிற்சிகள் நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது.
…