- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 112 (IPC Section 112 in Tamil)

266 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 112 (IPC Section 112 in Tamil)

விளக்கம்

A என்பவர், B என்ற இடத்தில் கூட்டுக்கொள்ளை புரியப்பட இருக்கிறது என்பதைத் தெரிந்தே, ஒரு எதிர்திசையில் இருக்கும் C என்ற ஒரு இடத்தில் ஒரு கூட்டுக்கொள்ளை புரியப்பட இருப்பதாக, நடுவருக்கு பொய்யாகத் தெரிவிக்கிறார், மற்றும் அதனால் அக்குற்றம் புரியப்படுவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன், நடுவரைத் திசை திருப்புகிறார்.அத்திட்டத்தின் தொடர்வில் B என்ற அவ்விடத்தில் கூட்டுக்கொள்ளை புரியப்படுகிறது.இச்சட்டப்பிரிவின்கீழ் A தண்டனைக்குள்ளாவார்.
கடைசி முந்தைய சட்டப்பிரிவின்கீழ் எந்தஒரு செயலுக்குத் தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாக வேண்டுமோ, அச்செயல் தூண்டப்பட்ட செயலுக்கும் கூடுதலாக புரியப்பட்டிருந்தால், மற்றும் ஒரு முற்றிலும் வேறான குற்றத்தை ஏற்படுத்தினால் அக்குற்றங்களில் ஒவ்வொன்றுக்காகவும் தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாவார்.
எடுத்துக்காட்டு
A என்பவர், ஒரு பொதுப் பணியாளரால் செய்யப்பட்ட ஒரு உடைமை கைப்பற்றுகையாணையை பலத்தால் எதிர்ப்பதற்கு B என்பவரைத் தூண்டிவிடுகிறார்.அந்த உடைமை கைப்பற்றுகையாணையை நிறைவேற்றுகின்ற அலுவலருக்குத் தன்னிச்சையாகக் கொடுங்காயத்தை B விளைவிக்கிறார்.அந்த கைப்பற்றுகையாணையை எதிர்க்கும் குற்றம் மற்றும் தன்னிச்சையாகக் கொடுங்காயத்தை விளைவிக்கும் குற்றம் ஆகிய இரண்டு குற்றங்களையும் B புரிந்திருப்பதால், இரண்டு குற்றங்களுக்காகவும் B தண்டனைக்குள்ளாவார்;மற்றும் அந்த கைப்பற்றுகையாணையை எதிர்ப்பதில் B அநேகமாக தன்னிச்சையாக கொடுங்காயத்தை விளைவிப்பார் என A க்குத் தெரிந்திருந்தால், A யும் அக்குற்றங்களில் ஒவ்வொன்றுக்காகவும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 64 (IPC Section 64 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 64 (IPC Section 64 in Tamil) விளக்கம் எந்த ஒவ்வொரு நேர்வில், ஒரு குற்றம் சிறைத்தண்டனையுடனும் அதே சமயம் அபராதத்துடன்…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 333 (IPC Section 333 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியரைத் தம்முடைய கடமையை செய்யாமல் தடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன