இந்திய தண்டனை சட்டம் பிரிவு 115 (IPC Section 115 in Tamil)
விளக்கம்
குற்றம் புரியப்படாவிட்டால்:-
எவரேனும் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றம் புரிவதை தூண்டினால், அந்த தூண்டுதலின் விளைவில் அக்குற்றம் புரியப்படாவிட்டால், மற்றும் அத்தகைய தூண்டுதலின் தண்டனைக்காக இச்சட்டதால் வெளிப்படையான ஷரத்து செய்யப்பட்டிருக்காவிட்டால், ஏழு வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
அதன் விளைவில் தீங்கை விளைவிக்கும் செயல் செய்யப்பட்டால்:-
மற்றும் எந்தஒரு செயலுக்காக, தூண்டுதலின் விளைவில் தூண்டியவர் தண்டனைக்குள்ளவாரோ, மற்றும் எந்தஒரு செயல் யாரேனும் ஒரு நபருக்குக் காயத்தை விளைவிக்குமோ, அச்செயல் புரியப்பட்டால், தூண்டிவிட்டவர் ஏதாவதொரு வகையிலான பதினான்கு வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர், z என்பவரைக் கொலை செய்வதற்கு B என்பவரைத் தூண்டிவிடுகிறார்.அக்குற்றம் புரியப்படவில்லை.B, z யைக் கொலை செய்திருந்தால், அவர் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆகையினால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனைக்கு மற்றும் ஒரு அபாரதத்திற்கும் A உள்ளாக வேண்டும்;மற்றும் அந்த தூண்டுதலின் விளைவால் zக்கு ஏதாவதொரு காயமேற்பட்டிருந்தால், அவர் பதினான்கு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனைக்கு மற்றும் அபாரதத்திற்கும் உள்ளாக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க