- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 (IPC Section 116 in Tamil)

147 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 (IPC Section 116 in Tamil)

விளக்கம்

குற்றம் புரியப்படாவிட்டால்:-
எவரேனும், சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைத் தூண்டினால், அந்த தூண்டுதலின் விளைவில் அக்குற்றம் புரியப்படாவிட்டால், மற்றும் அத்தைகைய தூண்டுதலின் தண்டனைக்காக இச்சட்டத்தால் வெளிப்படையான ஷரத்து செய்யப்பட்டிருக்காவிட்டால், அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ள மிக நீண்ட கால அளவில் நான்கில் ஒரு பகுதிக்கு நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அக்குற்றத்திற்கென வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
தூண்டியவர் அல்லது தூண்டப்பட்ட நபர் குற்றத்தைத் தடுக்கும் கடமை எந்தஒரு பொதுப் பணியாளருக்கு இருக்கிறதோ,
அந்த ஒருபொதுப் பணியாளராக இருந்தால் :-
மற்றும் தூண்டியவர் அல்லது தூண்டப்பட்ட நபர், அத்தகைய குற்றம் புரிவதைத் தடுக்கும் கடமை எந்தஒரு பொதுப் பணியாளருக்கு இருக்கிறதோ, அந்த ஒருபொதுப் பணியாளராக இருந்தால், அக்குற்றம் புரிந்தவர் அக்குற்றத்திற்ககென வகை செய்யப்பட்டுள்ள மிக நீண்ட கால அளவில் ஒரு பாதியளவிற்கு நீடிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ளவாறான அத்தகைய அபாரதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்
(a )B என்ற ஒரு பொது பணியாளர், அலுவல்முறைப் பணிகளை புரிகையில், ஏதாவது சலுகையை A என்பவருக்குச் செய்வதற்காக ஒரு வெகுமதியாக ஒரு கைய்யூட்டைக் Bக்குக் கொடுக்க A முனைகிறார்.அந்த கைய்யூட்டைப் பெறுவதற்கு B மறுக்கிறார்.இச்சட்டப்பிரிவின்கீழ் A தண்டனைக்குள்ளாவார்.
(b )A என்பவர், B என்பவரைப் பொய்யான சாட்சியம் அளிப்பதற்குத் தூண்டிவிடுகிறார்.இங்கு B பொய்யான சாட்சியம் அளிக்கவில்லை, இருந்தபோதிலும் இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்ட குற்றத்தை A புரிந்திருக்கிறார் மற்றும் அதன்படி தண்டனைக்குள்ளாவார்.
(c )கொள்ளையைத் தடுப்பதற்கு கடமையாகக் கொண்ட A என்ற ஒரு காவல் அலுவலர், கொள்ளையை புரிவதற்குத் தூண்டுகிறார்.இங்கு அக்கொள்ளை புரியப்பட்டிருக்கவிட்டாலும் கூட, B கொள்ளைக் குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள சிறைத்தண்டனையின் மிக நீண்ட கால அளவில் ஒரு பாதிக்கு, மற்றும் அபராதத்திற்கும் உள்ளாக வேண்டும்.
(d )கொள்ளைக் குற்றத்தைத் தடுப்பதை கடமையாகக் கொண்ட A என்ற ஒரு காவல் அலுவலரால், ஒரு கொள்ளை புரியப்பட்டுவதை B என்பவர் தூண்டிவிடுகிறார்.இங்கு அக்கொள்ளை புரியப்பட்டிருக்கவிட்டாலும் கூட, B கொள்ளைக் குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள சிறைத்தண்டனையின் மிக நீண்ட கால அளவில் பாதிக்கு மற்றும் அபராதத்திற்கும் உள்ளாக வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363 (IPC Section 363 in Tamil)

Posted by - நவம்பர் 13, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363 (IPC Section 363 in Tamil) விளக்கம் ஒரு நபரை இந்தியாவிற்கு வெளியே கவர்ந்து சென்றாலும், இந்தியாவிற்கு உள்ளே சட்டபூர்வமான…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 244 (IPC Section 244 in Tamil)

Posted by - நவம்பர் 9, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 244 (IPC Section 244 in Tamil) விளக்கம் எவரேனும், இந்தியாவில் சட்டப்படி நிறுவப்பட்ட ஏதாவதொரு நாணய தொழிற்சாலையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளபோது, உள்நோக்கத்துடன்,…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 94 (IPC Section 94 in Tamil)

Posted by - நவம்பர் 2, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 94 (IPC Section 94 in Tamil) விளக்கம் கொலை மற்றும் மரணத்தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய நாட்டிற்கெதிரான குற்றங்களை தவிர எக்குற்றம் அச்சுறுத்தல்களால்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன