- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 118 (IPC Section 118 in Tamil)

355 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 118 (IPC Section 118 in Tamil)

விளக்கம்

எவரேனும், மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்தைப் புரிய உதவி செய்யும் உள்நோக்கத்தில் அல்லது அவர் அதனால் அநேகமாக அதற்கு உதவி செய்யக்கூடும் என தெரிந்தே;
அத்தகைய குற்றத்தைப் புரிவதற்கான ஒரு திட்டத்தை ஏதாவதொரு செயல் அல்லது செய்வன செய்யாமையால், அல்லது ரகசியக் குறியீடு, அல்லது ஏதாவதொரு பிற தகவலை மறைக்கும் உபகரணத்தைப் பயன்படுத்துவதால் தன்னிச்சையாக மறைத்தால் அல்லது அத்தகைய திட்டத்தின் பொருட்டு பொய்யானது என அவருக்குத் தெரிந்தே, ஏதாவதொரு வெளிப்படுதலை செய்தால்,
குற்றம் புரியப்பட்டால்:-
அக்குற்றம் புரியப்பட்டால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
குற்றம் புரியப்படாவிட்டால்:-
அல்லது அக்குற்றம் புரியப்படாவிட்டால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்;
மற்றும் அந்த எந்தஒரு நேர்விலும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர், B என்ற இடத்தில் கூட்டுக்கொள்ளை புரியப்பட இருக்கிறது என்பதைத் தெரிந்தே, ஒரு எதிர்திசையில் இருக்கும் C என்ற ஒரு இடத்தில் ஒரு கூட்டுக்கொள்ளை புரியப்பட இருப்பதாக, நடுவருக்கு பொய்யாகத் தெரிவிக்கிறார், மற்றும் அதனால் அக்குற்றம் புரியப்படுவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன், நடுவரைத் திசை திருப்புகிறார்.அத்திட்டத்தின் தொடர்வில் B என்ற அவ்விடத்தில் கூட்டுக்கொள்ளை புரியப்படுகிறது.இச்சட்டப்பிரிவின்கீழ் A தண்டனைக்குள்ளாவார்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 318 (IPC Section 318 in Tamil)

Posted by - நவம்பர் 12, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 318 (IPC Section 318 in Tamil) விளக்கம் ஒரு குழந்தை பிறப்பதற்குமுன் அல்லது பிறக்கும்பொழுது அல்லது பிறந்தபின் மரணமடைந்திருக்கலாம். அக்குழந்தையை…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380 (IPC Section 380 in Tamil)

Posted by - நவம்பர் 13, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380 (IPC Section 380 in Tamil) விளக்கம் குடியிருப்பதற்காகப் பயன்படும் அல்லது சொத்துக்களை பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் வீடு, கூடாரம்…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 73 (IPC Section 73 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 73 (IPC Section 73 in Tamil) விளக்கம் எந்தஒரு குற்றத்திற்காக இச்சட்டத்தின் கீழ் யாரேனும் ஒரு நபர் தண்டிக்கப்படுகிறாரோ அக்குற்றத்திற்;காக…

உங்கள் கருத்தை இடுக...