இந்திய தண்டனை சட்டம் பிரிவு 121A (IPC Section 121A in Tamil)
விளக்கம்
இந்தியாவிற்கு உள்ளே அல்லது வெளியே உள்ள எவரேனும், சட்டப்பிரிவு 121ஆல் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களில் ஏதாவதொன்றைப் புரிவதற்குச் சதி செய்தால் அல்லது குற்றமுறு பலப்பிரயோகத்தின் வழிகளால் அல்லது குற்றமுறு பலப்பிரயோகத்தைக் காட்டுவதால் மத்திய அரசாங்கம் அல்லது ஏதாவதொரு மாநில அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்குச் சதி செய்தால், ஆயுள் சிறைத்தண்டனையுடன், அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்க பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
விளக்கம்:-இச்சட்டப்பிரிவின் கீழ், ஒரு சதியை ஏற்படுத்துவதற்கு, அதனின் தொடர்வில், ஏதாவதொரு செயல் அல்லது சட்டவிரோதமான செய்வன செய்யாமை நடந்திருக்க வேண்டுமென்பது அவசியமானதன்று.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க