இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124 (IPC Section 124 in Tamil)
விளக்கம்
எவரேனும் இந்திய குடியரசுத்தலைவர், அல்லது ஏதாவதொரு மாநிலத்தின் ஆளுநரின் சட்டபூர்வ அதிகாரங்களில் ஏதாவதொன்றை ஏதாவதொரு முறையில் பயன்படுத்துவதற்கு அல்லது தவிர்ப்பதற்கு அத்தகைய குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரைத் தூண்டும் அல்லது கட்டாயப்படுத்தும் உள்நோக்கத்துடன், அத்தகைய குடியரசுத் தலைவரை அல்லது ஆளுநரைத் தாக்கினால் அல்லது முறையின்றித் தடுத்தால் அல்லது முறையின்றி தடுப்பதற்கு முயன்றால் அல்லது குற்றமுறு பலப்பிரயோக வழிகளால் அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதலால் பணிய வைத்தால் அல்லது அவ்வாறாக பணியவைக்க முயன்றால்,
ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க