இந்திய தண்டனை சட்டம் பிரிவு 131 (IPC Section 131 in Tamil)
விளக்கம்
எவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் ஒரு அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால் கலகம் புரியப்படுவதற்குத் தூண்டினால், அல்லது யாரேனும் ஒரு அத்தகைய அலுவலர், தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரை அவரின் விசுவாசத்திலிருந்து அல்லது அவரின் கடமையிலிருந்து கீழ்ப்படியாமைக்கு இசையச் செய்ய முயன்றால் ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
விளக்கம்:-இச்சட்டப் பிரிவில், “அலுவலர்”, “தரைப்படை வீரர்”, “கடற்படை வீரர்” மற்றும் ” விமானப்படை வீரர்” என்ற வார்தைகளானது, தரைப்படை சட்டம், தரைப்படைச் சட்டம், 1950(46/1950), கடற்படை ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய கடற்படை (ஒழுங்குமுறைச்சட்டம்), 1934(34/1934), விமானப்படைச் சட்டம் அல்லது விமானப்படை சட்டம், 1950(45/1950) ஆகியவற்றிற்கு உட்பட்ட, அது எதுவாக இருப்பினும்,, யாரேனும் ஒரு நபரை உள்ளடக்குகிறது.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க