இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153AA (IPC Section 153AA in Tamil)
விளக்கம்
எவரேனும் குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 இன் சட்டப் பிரிவு 144A இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட அல்லது செய்யப்பட்ட ஏதாவதொரு பொது அறிக்கை அல்லது உத்தரவிற்கு மாறாக ஏதாவதொரு பொது இடத்தில் ஏதாவதொரு ஊர்வலத்தில் ஆயுதங்களைத் தெரிந்தே எடுத்துச் சென்றால் அல்லது ஆயுதங்களுடன் ஏதாவதொரு பெரும்படைப் பயிற்சி அல்லது பெரும்பயிற்சியை ஏற்பாடு செய்தால் அல்லது நடத்தினால் அல்லது பங்கேற்றால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், மற்றும் ரூபாய் இரண்டாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.
விளக்கம்:-“ஆயுதங்கள் “என்பது, தாக்குதல் அல்லது தற்காப்பிற்கான ஆயுதங்களாக வடிவமைக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஏதாவதொரு விவரிப்பு கொண்ட பொருட்கள் என பொருள்படும் மற்றும் துப்பாக்கிகள், கூர்முனை கொண்ட ஆயுதங்கள், குறுந்தடிகள், தண்டாக்கள் மற்றும் கம்புகளையும் உள்ளடக்குகிறது.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க