- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153B (IPC Section 153B in Tamil)

188 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153B (IPC Section 153B in Tamil)

விளக்கம்

1. பேச்சு, எழுத்து அல்லது சைகையால் அல்லது காணத்தகும் பொருட்களின் மூலம் அல்லது வேறு எந்த விதத்திலாவது.
a) ஒரு சமய, இன, மொழி அல்லது சாதி சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கின்ற காரணம் காட்டி எவரேனும், சட்டரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசிடம் உண்மையான நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருக்க முடியாது அல்லது இந்திய அரசாட்சியில் உரிமையும் சுதந்திரத்தையும் முழுமையாக நிலை நிறுத்தமுடியாது என்கிற வகையில் குற்றச்சாட்டைச் செய்தாலும் சுமத்தினாலும்.
b) சமய, இன, மொழி அல்லது பிராந்தியக்குழு, சாதி, சமூகம் அல்லது பிரிவு எதனிலேனும் உறுப்பினராக இருக்கிற காரணம் காட்டி எவருக்கேனும் இந்தியாவின் குடிமக்கள் என்ற முறையில் அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்பட வேண்டும், பறிக்கப்பட வேண்டும் என்று உரைக்கின்ற அல்லது ஆலோசனை சொல்கின்ற பிரச்சாரம் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற அல்லது.
c) ஒரு சமய, இன, மொழி, பிராந்தியக் குழு அல்லது சாதி, சமூகம் எதனிலேனும் உறுப்பினராக இருக்கின்றனர் என்று காரணம் காட்டி எந்த ஓர் உறுப்பினருக்குரிய கட்டுப்பாடு பற்றி உரைத்தல், ஆலோசனை, கோரிக்கை அல்லது வேண்டுகோள் ஏதேனும் வெளியிடுதல் ஆகியவற்றால் அந்த வகுப்பினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை, பகை உணர்ச்சி அல்லது குரோதகம் அல்லது வெறுப்பை உண்டாகும் விதத்தில் அத்தகைய ஆலோசனை, அறிவிப்பு, கோரிக்கை, வேண்டுகோள் ஆகியவற்றைச் செய்கின்ற அல்லது வெளியிடுகின்ற;
ஒவ்வொருவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்
2. வழிபாட்டிடம் அல்லது சமய வழிபாடு அல்லது சமயச் சடங்குகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் ஒரு கூட்டத்தில் (1) வது உட்பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றச் செயலைப் புரிவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
 
தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பாதகமான குற்றஞ்சாட்டல்கள், வலியுறுத்தல்கள்
(1) எவரேனும், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளால், அல்லது சைகைகளால், அல்லது பார்க்கக்கூடிய வெளிப்படுத்தல்களால் அல்லது மற்றபடியாக:-
(a )ஏதாவதொரு வகுப்பின் நபர்கள், ஏதாவதொரு மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவில் உறுப்பினர்களாக அவர்கள் இருக்கும் காரணத்தால், சட்டப் படி ஏற்படுத்தப் பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உண்மையான நம்பிக்கை மற்றும் பற்றுறுதியை கொண்டிருக்க முடியாது அல்லது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநாட்ட முடியாது என்ற ஏதாவதொரு குற்றஞ்சாட்டலை செய்தால் அல்லது பிரசுரித்து வெளியிட்டால் அல்லது
(b )ஏதாவதொரு வகுப்பின் நபர்கள், ஏதாவதொரு மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவில் உறுப்பினர்களாக அவர்கள் இருக்கும் காரணத்தால், இந்திய குடிமக்கள் என்ற முறையில் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு அல்லது இழக்கப்படுவதற்கு வலியுறுத்தினால், ஆலோசனை கூறினால், அறிவுரை வழங்கினால், பரப்பினால் அல்லது பிரசுரித்து வெளியிட்டால் அல்லது
(c ).ஏதாவதொரு வகுப்பின் நபர்கள், ஏதாவதொரு மத, இன, மொழி அல்லது பிராந்திய வகுப்பு அல்லது ஜாதி அல்லது பிரிவில் உறுப்பினர்களாக அவர்கள் இருக்கும் காரணத்தால், ஏதாவதொரு வகுப்பின் நபர்களின் கடமை சம்மந்தப்பட்ட, ஏதாவதொரு வலியுறுத்தல், ஆலோசனை, வாதம் அல்லது வேண்டுகோளை செய்தால் அல்லது பிரசுரித்து வெளியிட்டால், மற்றும் அத்தகைய வலியுறுத்தல், ஆலோசனை, வாதம் அல்லது வேண்டுகோள், அத்தகைய உறுப்பினர்கள் மற்றும் பிற நபர்களுக்கிடையே ஒற்றுமையின்மை அல்லது பகைமை உணர்வுகள் அல்லது வெறுப்பு அல்லது மனக்கசப்பை விளைவித்தால் அல்லது அநேகமாக விளைவித்தால்,
மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
(2)எவரேனும், ஏதாவதொரு வழிபாட்டிடத்தில், அல்லது மத வழிபாடு அல்லது மத சடங்குகளை செய்து கொண்டிருப்பதில் ஈடுபட்டிருக்கும் ஏதாவதொரு கூட்டத்தில், சட்ட உட்பிரிவு(1)இல் குறிப்பிடப்பட்ட ஒரு குற்றத்தைப் புரிந்தால், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 194 (IPC Section 194 in Tamil)

Posted by - நவம்பர் 7, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 194 (IPC Section 194 in Tamil) விளக்கம் எவரேனும் இந்தியாவில் தற்போது அமலிலுள்ள சட்டத்தின்படி மரண தண்டனையுடன் கூடிய ஒரு…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 187 (IPC Section 187 in Tamil)

Posted by - நவம்பர் 7, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 187 (IPC Section 187 in Tamil) விளக்கம் எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் அவரின் பொதுப்பணியை நிறைவேற்றும்போது அவருக்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன