- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 154 (IPC Section 154 in Tamil)

172 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 154 (IPC Section 154 in Tamil)

விளக்கம்

யாரும் தம்முடைய இடத்தில் சட்ட விரோதமான கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது கலகம் நடைபெறுவதையும் அனுமதிக்கக் கூடாது.
ஒருவருடைய நிலத்தில் அத்தகைய சட்ட விரோதமான கூட்டம் அல்லது கலகம் நடைபெற்றால் அதனைப்பற்றி உடனே அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும்.
அப்படி அவர் அறிவிக்காமல் இருப்பது குற்றம். அத்தகைய கூட்டத்தை அல்லது கழகத்தை அனுமதித்தாலும் குற்றம், அந்தக் குற்றத்திற்காகத் தண்டனையாக அவருக்கும் ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாமல் அபராதம் விதிக்கப்படும்.
இந்த குற்றத்தை நிலைச் சொந்தக்காரர் நேரடியாகப் புரியாவிட்டாலும் அவருடைய ஆள் அல்லது பிரதிநிதி அல்லது மேலாளர் செய்தாலும் அபராதம் விதிக்கப்படும்.
அந்த குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர் உடனே எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் குற்றமாகும்.
 
எந்த நிலத்தில் ஒரு சட்டவிரோதமான கும்பல் கூடியிருக்கிறதோ, அந்த நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபவதாரர்
எப்போதெல்லாம் ஏதாவதொரு சட்டவிரோதமான கும்பல் அல்லது கலகம் நடைபெறுகிறதோ, அப்போது எந்த நிலத்தில் அத்தகைய சட்டவிரோதமான கும்பல் கூடியிருக்கிறதோ, அல்லது அத்தகைய கலகம் புரியப்பட்டிருக்கிறதோ, அந்த நிலத்தின் சொந்தக்காரர் அல்லது அனுபவதாரர் மற்றும் அத்தகைய நிலத்தில் ஒரு நலனைக் கொண்டிருக்கும் அல்லது அவரின் முகவருக்கு அல்லது மேலாளருக்கு, அத்தகைய குற்றம் புரியப்பட்டு கொண்டிருக்கிறது அல்லது புரியப்பட்டு இருக்கிறது என தெரிந்தே அல்லது அநேகமாக புரியப்படும் என நம்புவதற்கு காரணமிருக்கும் போது மிக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முதன்மை அலுவலருக்கு, அவரின் அல்லது அவர்களின் சார்பாக மிக விரைவில் தகவல் கொடுக்கவில்லையென்றால், மற்றும் அது புரியப்பட இருக்கிறது என்று அவர் அல்லது அவர்கள் நம்புவதற்குக் காரணமிருக்கும் நேர்வில், அதைத் தடுப்பதற்கு, அவரின் அல்லது அவர்களின் அதிகாரத்திலுள்ள அனைத்து சட்டப்படியான முறைகளை பயன்படுத்தவில்லையெனில், மற்றும் அது நடைபெற்றிருக்கும் போது அந்த கலகம் அல்லது சட்டவிரோதமான கும்பலைக் கலைப்பதற்கு அல்லது அடக்குவதற்கு அவரின் அல்லது அவர்களின் அதிகாரத்திலுள்ள அனைத்து சட்டப்படியான முறைகளை பயன்படுத்தவில்லையெனில், ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மிகாத அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன