- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 157 (IPC Section 157 in Tamil)

276 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 157 (IPC Section 157 in Tamil)

விளக்கம்

சட்ட விரோதமான ஒரு கூட்டத்துக்குப்புகலிடம் கொடுப்பது குற்றமாகும். ஆகவே சட்ட விரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அல்லது சட்டவிரோதமான கூட்டத்திற்கு என்று அமர்த்தப்பட்டவர்களை அல்லது சட்டவிரோதமான கூட்டத்திற்கென்று கூலிக்கு அழைக்கப்படுகின்றவர்களை அவர்கள் மேலே கூறியபடி சட்ட விரோதமான கூட்டத்தினர் என்று அறிந்த பின்னும் அவர்களை வரவேற்பதும், தம்முடைய இடத்தில் அவர்கள் ஒன்று சேர்வதற்கு அனுமதிப்பதும்,
அவர்களுக்குப் புகலிடம் தருவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
 
ஒரு சட்டவிரோதமான கும்பலுக்காக, கூலிக்கு அமர்த்தப்பட்ட நபர்களுக்கு புகலிடமளித்தல்
எவரேனும் ஒரு சட்டவிரோதமான கும்பலுக்காக, கூலிக்கு அமர்த்தப்பட, ஈடுபடுத்தப்பட அல்லது பணியமர்த்தப்பட அல்லது உறுப்பினர்களாக சேர்வதற்கு அல்லது ஆவதற்கு யாரேனும் நபர்களை, அத்தகைய நபர்கள் கூலிக்கு அமர்த்தப்படுவார்கள், ஈடுபடுத்துவார்கள் அல்லது பணிக்கமர்த்தப்படுவார்கள் என தெரிந்தே, அவரின் அனுபவத்தில் அல்லது பொறுப்பில் அல்லது கட்டுப்பாட்டில் உள்ள ஏதாவதொரு வீடு அல்லது வளாகத்தில் புகலிடமளித்தால், பெற்றால் அல்லது ஒன்றுசேர்த்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 213 (IPC Section 213 in Tamil)

Posted by - நவம்பர் 8, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 213 (IPC Section 213 in Tamil) விளக்கம் எவரேனும், அவர் ஒரு குற்றத்தை மறைப்பதற்காக அல்லது ஏதாவதொரு குற்றத்திற்கான சட்டப்பூர்வ…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன