- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 158 (IPC Section 158 in Tamil)

243 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 158 (IPC Section 158 in Tamil)

விளக்கம்

இந்தச் சட்டத்தின் 141-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களில் ஒன்றைப் புரிவதற்காக அல்லது துணை புரிவதற்காக யாரவது அமர்த்தப்பட்டாலும், கூலிக்கு அமர்த்தப்பட்டாலும் அல்லது அமர்த்துவதற்கு முயற்சி நடைபெற்றாலும் குற்றமாகும். இந்த குற்றத்துக்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் விதிக்கலாம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
அப்படி அமர்த்தப்பட்ட நபர் மரணத்தை உண்டாக்கக் கூடிய ஆயுதம் அல்லது அபாயகரமான ஆயுதம் தாங்கி அந்தக் கூட்டத்தில் செல்ல முன்வந்தால் அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

 
ஒரு சட்டவிரோதமான கும்பல் அல்லது கலகத்தில் பங்கு கொள்வதற்கு கூலிக்கு அமர்த்தப்படல்
எவரேனும் சட்டப் பிரிவு 141இல் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களில் ஏதாவதொன்றைச் செய்வதற்கு அல்லது செய்ய உதவுவதற்கு ஈடுபடுத்தப்பட்டால், அல்லது கூலிக்கு அமர்த்தப் பட்டால், அல்லது கூலிக்கு அமர்த்தப்பட அல்லது ஈடுபடுத்தப்பட முனைந்தால், அல்லது முயன்றால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
அல்லது ஆயதமேந்திச் செல்வதற்கு:-
மற்றும் எவரேனும், மேற்கூறப்பட்டவறாக அவ்வாறு ஈடுபடுத்தப்பட்டு அல்லது கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் போது ஏதாவதொரு அபாயகரமான ஆயுதத்துடன் அல்லது மரணத்தை அநேகமாக விளைவிக்கும் குற்றத்தின் ஒரு ஆயுதமாக எந்தவொன்றைப் பயன்படுத்தலாமோ, அந்தவொரு ஆயுதமேந்திச் சென்றால் அல்லது ஈடுபட்டால் அல்லது ஆயுதத்துடன் செல்வதற்கு முனைந்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கபடக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 403 (IPC Section 403 in Tamil)

Posted by - நவம்பர் 14, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 403 (IPC Section 403 in Tamil) விளக்கம் நேர்மையின்றி ஓர் அசையும் பொருளைத் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கென மாற்றி கொள்வதும்…
- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 202 (IPC Section 202 in Tamil)

Posted by - நவம்பர் 7, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 202 (IPC Section 202 in Tamil) விளக்கம் எவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 227 (IPC Section 227 in Tamil)

Posted by - நவம்பர் 9, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 227 (IPC Section 227 in Tamil) விளக்கம் ஏதாவதொரு நிபந்தனைக்குட்பட்ட தண்டனைக் கழிப்பை ஏற்றுக்கொண்ட எவரேனும் எந்த நிபந்தனையின்பேரில் அத்தகைய…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC Section 498A in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC Section 498A in Tamil) விளக்கம் ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன