- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 173 (IPC Section 173 in Tamil)

122 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 173 (IPC Section 173 in Tamil)

விளக்கம்

எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையில் ஏதாவதொரு அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் கொண்டு பிறப்பிக்கும் அத்தகைய அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவை தன்னிடமோ அல்லது யாரேனும் ஒரு பிற நபரிடமோ சார்பு செய்யப்படுவதை ஏதாவதொரு முறையில் உள்நோக்கத்துடன் தடுத்தால், அல்லது அத்தகைய அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவை ஏதாவதொரு இடத்தில் சட்டப்படியாக ஒட்டப்படுவதை உள்நோக்கத்துடன் தடுத்தால்,
அல்லது ஏதாவதொரு இடத்தில் சட்டப்படி ஒட்டப் பட்டிருக்கின்ற ஏதாவதொரு அத்தகைய அழைப்பாணை, அறிவிக்கை அல்லது உத்தரவை உள்நோக்கத்துடன் அகற்றினால், அல்லது யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு பொது அறிவிப்பை வெளியிட சட்டப்படி அதிகாரம் படைத்த அத்தகைய பொதுப் பணியாளரால் கட்டளையிடப்படும் அத்தகைய பொது அறிவிப்பு சட்டப்படி வெளியிடப்படுவதை உள்நோக்கத்துடன் தடுத்தால், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
அல்லது, அவ்வழைப்பாணை, அறிவிக்கை, உத்தரவு அல்லது பொது அறிவிப்பு ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில், தானோ அல்லது முகவர் மூலமாக முன்னிலையாவதற்கோ அல்லது ஒரு ஆவணம் அல்லது மின்னணுப் பதிவை ஒப்படைப்பதற்கோ இருந்தால் ஆறுமாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரணச் சிறைத்தண்டணையுடன் அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 236 (IPC Section 236 in Tamil)

Posted by - நவம்பர் 9, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 236 (IPC Section 236 in Tamil) விளக்கம் எவரேனும், இந்தியாவில் இருக்கும்போது இந்தியாவிற்கு வெளியே நாணயம் போலியாகத் தயாரிக்கப்படுவதை தூண்டினால்,…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 251 (IPC Section 251 in Tamil)

Posted by - அக்டோபர் 29, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 251 (IPC Section 251 in Tamil) விளக்கம் எவரேனும், அவரின் உடமையிலுள்ள எந்த நாணயத்தின் பொருட்டு சட்டப்பிரிவு 247 அல்லது…

உங்கள் கருத்தை இடுக...