இந்திய தண்டனை சட்டம் பிரிவு 190 (IPC Section 190 in Tamil)
விளக்கம்
எவரேனும், ஏதாவதொரு தீங்கிற்கெதிராக பாதுகாப்பு கொடுக்க அல்லது அத்தகைய பாதுகாப்பு கொடுக்கப்படச் செய்ய சட்டப்படி அதிகாரம் கொண்ட யாரேனும் ஒரு பொதுப்பணியாளரிடம், பொதுப் பணியாளர் என்ற முறையில் ஏதாவதொரு தீங்கு விளைவித்தலிலிருந்து பாதுகாக்க யாரேனும் ஒரு நபர், ஒரு சட்டப்படியான விண்ணப்பம் கொடுப்பதிலிருந்து பின்வாங்க அல்லது விலகியிருக்க தூண்டும் நோக்கத்திற்காக தீங்கு விளைவிக்க அச்சுறுத்தினால் ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க