- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 195 (IPC Section 195 in Tamil)

183 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 195 (IPC Section 195 in Tamil)

விளக்கம்

எவரேனும் இந்தியாவில் தற்போது அமலில் இருக்கும் சட்டத்தின்படி மரண தண்டனை, விதிக்கபட முடியாத, ஆனால் ஆயுள் சிறைத்தண்டனையால் அல்லது ஏழு வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனைக்குரிய ஒரு குற்றத்தில் யாரேனும் ஒரு நபரை தண்டிக்கப்படச் செய்வதற்காக உள்நோக்கத்தில் அல்லது அநேகமாக அவ்வாறு செய்யப்படலாமென்று தெரிந்தே, பொய் சாட்சியத்தைக் கொடுத்தால் அல்லது புனைந்தால் அக்குற்றத்தில் தண்டிக்கப்பட்ட ஒரு நபருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டதோ, அதே தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர், z என்பவரை ஒரு கூட்டுக் கொள்ளை புரிந்த குற்றத்திற்கு தண்டனையடையச் செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்தில் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தின் முன்பு பொய்யான சாட்சியம் அளிக்கிறார்.ஆயுள் சிறைத்தண்டனை அல்லது அபராததுடன் கூடிய அல்லது அபராதமில்லாத, பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான கடுங்காவல் சிறைத்தண்டனைதான் கூட்டுக் கொள்ளை புரிவதற்கான தண்டனையாகும்.எனவே A ஆயுள் சிறைத்தண்டனைக்கு அல்லது அபராதத்துடன், அல்லது அபராதமில்லாமல் கூடிய சிறைத் தண்டனைக்கு உள்ளாகுதல் வேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (IPC Section 376 in Tamil)

Posted by - நவம்பர் 13, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 (IPC Section 376 in Tamil) விளக்கம் 1. 2-வது கிளைப்பிரிவில் விளக்கப்பட்டுள்ள நிலைகளில் அன்றி வன்முறைப் புணர்ச்சியில் ஈடுபடுகின்ற…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (IPC Section 304 in Tamil)

Posted by - நவம்பர் 11, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (IPC Section 304 in Tamil) விளக்கம் கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவனுக்கு, அவன் அந்த…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன