இந்திய தண்டனை சட்டம் பிரிவு 206 (IPC Section 206 in Tamil)
விளக்கம்
எவரேனும், தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு தண்டணைவிதிப்பின் காரணமாக, அல்லது ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தினால் அல்லது பிற தகுதி வாய்ந்த அதிகார அமைப்பினால் அத்தகைய தண்டனைவிதிப்பு வழங்கப்படலாமென்று தெரிந்தே, அல்லது ஒரு உரிமையியல் வழக்கில் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றம் வழங்கிய அல்லது வழங்கப்படலாமென்ற உரிமையியல் தீர்ப்பாணை அல்லது உத்தரவின்பேரில் அச்சொத்து அல்லது அதிலுள்ள ஆதாய உரிமை எடுக்கப்படலாமென்றிக்கும்போது, ஏதாவதொரு சொத்தை அதிலுள்ள ஆதாய உரிமையை ஒரு பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்கும் உள்நோக்கத்தில், மோசடியாக அகற்றினால், மறைத்து வைத்தால், யாரேனும் ஒரு நபருக்கு உரிமை மாறுதல் செய்தால் அல்லது ஒப்படைப்பு செய்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க