இந்திய தண்டனை சட்டம் பிரிவு 213 (IPC Section 213 in Tamil)
விளக்கம்
எவரேனும், அவர் ஒரு குற்றத்தை மறைப்பதற்காக அல்லது ஏதாவதொரு குற்றத்திற்கான சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து யாரேனும் ஒரு நபரை அவர் தப்புவிப்பதற்காக அல்லது யாரேனும் ஒரு நபரை சட்டப்பூர்வ தண்டனைக்குள்ளாக்கும் பொருட்டு அவருக்கெதிராக எவ்வித செயல் நடவடிக்கையும் அவர் எடுக்காமலிருப்பதற்குப் பலனாக, ஏதாவதொரு கையூட்டை அவருக்காகவோ அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்காகவோ ஏற்றுக்கொண்டால், அல்லது பெறுவதற்கு முயன்றால் அல்லது ஏற்றுக்கொள்ள ஒத்துக் கொண்டால், அல்லது அவருக்காகவோ அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்காகவோ ஏதாவது சொத்தை திரும்பப் பெற்றாலோ,
ஒரு மரண தண்டனையாக இருந்தால்:-
அக்குற்றம் மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால்:-
மற்றும் அக்குற்றம் ஆயுள் சிறைத்தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
மற்றும் அக்குற்றம் பத்து வருடங்களுக்கு மிகாத சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால், அக்குற்றத்திற்க்கென்று வகை செய்யப்பட்டுள்ள நீண்ட கால சிறைத் தண்டனையின் நான்கில் ஒரு பங்கு என்ற ஒரு கால அளவிலான அக்குற்றத்திற்கென்று வரையறுக்கப்பட்டுள்ள வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க