- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 228A (IPC Section 228A in Tamil)

179 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 228A (IPC Section 228A in Tamil)

விளக்கம்

(1) எவரேனும், எந்த ஒரு நபருக்கெதிராக சட்டப்பிரிவு 376, சட்டப்பிரிவு 376A, சட்டப்பிரிவு 376B, சட்டப்பிரிவு 376C, சட்டப்பிரிவு 376D அல்லது சட்டப்பிரிவு 376E இன் கீழ் குற்றம் புரியப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டதோ அல்லது கண்டறியப்பட்டதோ (இதன்பின்பு இச்சட்டப்பிரிவில் அவர் பாதிக்கப்பட்டவர் என்றே குறிப்பிடப்படுவார்)அந்நபரின் பெயரை அல்லது அடையாளத்தை வெளிப்படுத்தும் ஏதாவதொரு விஷயத்தை அச்சிட்டால் அல்லது பிரசுரித்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொருவகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
(2) பாதிக்கப்பட்டவரின் பெயரை அல்லது அடையாளத்தை வெளிப்படுத்தும் ஏதாவதொரு விஷயத்திலான ஏதாவதொரு அச்சிடல் அல்லது பிரசுரித்தல், பின்வரும் அத்தகைய அச்சிடல் அல்லது பிரசுரித்தல் சம்பந்தமாக இருந்தால், சட்ட உட்ப்பிரிவு (1)இல் கூறப்பட்டவைகள், அதற்குப் பொருந்தாது.
(a ).காவல் நிலையப் பொறுப்பு அலுவலரின் அல்லது அத்தகைய புலன்விசாரணையின் நோக்கங்களுக்காக நன்னம்பிக்கையின் பேரில் அத்தகைய குற்றத்தைப் புலன்விசாரணை செய்யும் காவல் அலுவரின், எழுத்தினாலான உத்தரவினால் அல்லது உத்தரவின்கீழ் அவ்வாறு செய்யப்பட்டால்;அல்லது
(b )பாதிக்கப்பட்டவரின் எழுத்துமூலமான அதிகாரமளித்தால் அல்லது அதிகாரத்துடன் அவ்வாறு செய்யப்பட்டால் அல்லது
(c )பாதிக்கப்பட்டவர் மரணமடைந்துவிட்டால் அல்லது இளம் சிறாராக அல்லது மனநலம் குன்றியவாராக இருந்தால், அத்தகைய பாதிக்கப்பட்டவரின், அடுத்த நெருங்கிய உறவினரின் எழுத்துமூலமான அதிகாரமளித்தால் அல்லது அதிகாரத்துடன் அவ்வாறு செய்யப்பட்டால்;
இருப்பினும், ஏதாவதொரு அங்கீகரிக்கப்பட்ட நல்வாழ்வு நிறுவனத்தின் அல்லது அமைப்பின் தலைவர் அல்லது செயலாளர் தவிர அவர்கள் எப்பெயரில் அழைக்கப்பட்டாலும் அத்தகைய எந்தவொரு அதிகாரமளிப்பும் பாதிக்கப்பட்டவரின் அடுத்த உறவினரால் பிற ஏதாவதொருவரிடம் அளிக்கப்படக்கூடாது.
விளக்கம் :-இச்சட்ட உட்பிரிவின் நோக்கங்களுக்காக, “அங்கீகரிக்கப்பட்ட நல்வாழ்வு நிறுவனம் அல்லது அமைப்பு” என்பது இது சம்பந்தமாக மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஒரு சமூக நல நிறுவனம் அல்லது அமைப்பு எனப் பொருள்படும்.
(3) எவரேனும் சட்ட உட்பிரிவு (1)இல் கூறப்பட்டுள்ள ஒரு குற்றத்தின் பொருட்டு ஒரு நீதிமன்றத்தின் முன்பான ஏதாவதொரு செயல் நடவடிக்கை சம்பந்தமான ஏதாவதொரு விஷயத்தை அத்தகைய நீதிமன்றத்தின் முன்அனுமதியில்லாமல் அச்சிட்டால் அல்லது பிரசுரித்தால் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான ஏதாவதொருவகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
விளக்கம்:-ஏதாவதொரு உயர் நீதிமன்றத்தின் அல்லது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புரையை அச்சிடல் அல்லது பிரசுரித்தல், இச்சட்டப்பிரிவின் பொருளின்படி ஒரு குற்றமாக ஆகாது.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 3

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil)

Posted by - நவம்பர் 13, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil) விளக்கம் ஒரு பொதுஊழியர், சட்டப்படி தனக்குள்ள கடமையை செய்யவரும்போது அப்படி கடமையாற்றவிடாமல் அவரை…
- 5

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 175 (IPC Section 175 in Tamil)

Posted by - நவம்பர் 6, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 175 (IPC Section 175 in Tamil) ஐபிசி பிரிவு 175 – ஆவணங்களை வழங்குவதற்கு சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்படுபவர் சமர்பிக்காமல் தவிர்த்தல்…
- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489A (IPC Section 489A in Tamil)

Posted by - நவம்பர் 15, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489A (IPC Section 489A in Tamil) விளக்கம் ரூபாய்நோட்டுகளை அல்லது வாங்கிநோட்டுகளைப் போலியாகத் தயாரித்தாலும் அல்லது அவற்றைப் போலியாக்குவதற்கான வேலையில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன