- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 241 (IPC Section 241 in Tamil)

149 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 241 (IPC Section 241 in Tamil)

விளக்கம்

எவரேனும், ஏதாவதொரு போலியான நாணயத்தை, அது போலியானதுதான் என அவருக்குத் தெரிந்தே, ஆனால், அதை அவர் தனது உடைமையில் எடுத்துக்கொண்ட காலத்தின்போது அது போலியான நாணயம் என அவருக்கு தெரியாதிருந்து அதை உண்மையானது என்று யாரேனும் ஒரு பிற நபருக்குக் கொடுத்தால் அல்லது யாரேனும் ஒரு பிற நபரை உண்மையானதுபோன்று அதைப் பெற்று கொள்ள தூண்டிவிட முயன்றால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்ட நாணயத்தின் மதிப்பில் பத்து மடங்குகள் வரை நீட்டிக்கப்படகூடிய ஒரு தொகைக்கான அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்ற நாணயத் தயாரிப்பாளர், B என்ற தனது கூட்டாளிக் குற்றவாளிக்கு போலியான கம்பெனி ரூபாய்களை அவற்றை செலவாணியாக பரப்பும் நோக்கில் கொடுக்கிறார்.செலவாணியாகப் பரப்பும் மற்றொரு நபரான C என்பவருக்கு, B அதை விற்கிறார்.C அதைப் போலியானது என தெரிந்தே வாங்குகிறார்.C அந்த போலியான ரூபாய்களை சரக்கு வாங்குவதின் நிமித்தம் அதை Dஇடம் கொடுக்கிறார்;D அதைப் போலியான நாணயம் என தெரியாமலேயே வாங்கிக் கொள்கிறார் மற்றும் பின்பு அவைகளை போலியானதென கண்டுபிடித்த பின்பும, D அவைகளை, உண்மையானதுபோன்று பட்டுவாடா செய்கிறார், இங்கு இச்சட்டப்பிரிவின் படி மட்டுமே தண்டனைக்குள்ளாவார்.ஆனால் B மற்றும் C ஆகியோர்கள் சட்டப்பிரிவு 239 அல்லது 240 கீழ், அது எதுவாக இருப்பினும் தண்டனைக்குள்ளாவார்கள்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 3 (IPC Section 3 in Tamil)

Posted by - அக்டோபர் 30, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 3 (IPC Section 3 in Tamil) விளக்கம் இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டத்தின் கீழாவது இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற ஒரு…

உங்கள் கருத்தை இடுக...