இந்திய தண்டனை சட்டம் பிரிவு 275 (IPC Section 275 in Tamil)
விளக்கம்
எவரேனும், ஏதாவதொரு மருந்து அல்லது மருத்துவத் தயாரிப்பில், அதன் வீரியத்தைக் குறைக்கும் அத்தகைய ஒரு முறையில், அதனின் செயல்பாட்டு முறையை மாற்றி, அல்லது அதை கெடுதி விளைவிக்குமாறு செய்து கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்தே அதை விற்றால் அல்லது அளித்தால் அல்லது அதை விற்பனைக்காக வைத்தால் அல்லது கலப்படம் செய்யப்படாததுபோல் மருந்து நோக்கங்களுக்காக ஏதாவதொரு மருந்தகத்திலிருந்து அதை அளித்தால், அல்லது அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கின்றது என்று தெரியாமல் யாரேனும் ஒரு நபரால் அது மருந்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க