இந்திய தண்டனை சட்டம் பிரிவு 288 (IPC Section 288 in Tamil)
விளக்கம்
எவரேனும், ஏதாவதொரு கட்டிடத்தை இடிக்கும்போது அல்லது பழுதுபார்க்கும்போது அக்கட்டிடம் அல்லது அதன் ஏதாவதொரு பகுதி இடிந்து விழுந்து, அதனால் மனித உயிருக்கு ஏதாவதொரு அபாயம் விளைவிக்கப்படலாமென்பதற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அத்தகைய ஒழுங்குபடுத்துவதைத் தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க