- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 292 (IPC Section 292 in Tamil)

205 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 292 (IPC Section 292 in Tamil)

விளக்கம்

(1) சட்ட உட்பிரிவு (2) இன் நோக்கங்களுக்காக, ஒரு நூல், துண்டுப் பிரசுரம், செய்தித்தாள், எழுத்துரு, சித்திரம், ஓவியம், வெளிப்படுத்தல், வரைபடம் அல்லது ஏதாவதொரு பிற பொருள், காம உணர்ச்சியைத் தூண்டுவதாக அல்லது காம இச்சைகளை ஈர்ப்பதாக அல்லது(அதனது விளைவை அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறான இனங்களைக் கொண்டிருந்தால்)அவற்றின் ஏதாவதொரு இனத்தின் விளைவை, அதன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளும் ஒரு முழுவதுமாக கவனத்தில் கொள்ளப்படும்போது, அதில் அடங்கியுள்ள அல்லது பொருந்தியுள்ள விஷயத்தை அநேகமாக படிக்க, பார்க்க அல்லது கேட்க நேர்ந்தால், அது நபரின் ஒழுக்கத்தைக் கொடுக்கும் அல்லது நெறி பிறழச் செய்யும் அத்தகைய வகையில் இருக்குமானால், அது ஆபாசமானது என்பதற்கு நிகராகக் கொள்ளப்பட வேண்டும்.
(2)எவரேனும்-
(a )ஏதாவதொரு ஆபாச நூலை, துண்டுப் பிரசுரத்தை, செய்தித்தாளை, சித்திரத்தை, ஓவியத்தை வெளிப்படுத்தலை அல்லது வரைபடத்தை அல்லது ஏதாவதொரு பிற ஆபாச பொருளை விற்றால், வாடகைக்கு விட்டால், விநியோகித்தால், பொது இடத்தில் பார்வைக்கு வைத்தால் அல்லது அதை விற்க, வாடகைக்கு விட ஏதாவதொரு முறையில் சுற்றுக்கு விட, பொது இடத்தில் பார்வைக்கு வைக்க அல்லது சுற்றுக்கு விடும் நோக்கங்களுக்காக செய்தால், தயாரித்தால் அல்லது அவரின் உடமையில் வைத்திருந்தால் அல்லது
(b )மேற்கூறப்பட்டுள்ள நோக்கங்களில் ஏதாவதொன்றிற்காக அல்லது ஏதாவதொரு ஆபாசப்பொருள் விற்கப்பட, வாடகைக்கு விடப்பட, விநியோகிக்கப்பட அல்லது பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட அல்லது ஏதாவதொரு முறையில் சுற்றுக்கு விடப்படலாமென்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும் போது அத்தகைய பொருளை இறக்குமதி செய்தால், ஏற்றுமதி செய்தால் அல்லது எடுத்து சென்றால் அல்லது
(c )ஏதாவது அத்தகைய ஆபாசப் பொருட்கள், மேற்கூறப்பட்டுள்ள நோக்கங்களில் ஏதாவதொன்றிற்காக உள்ளவை, செய்யப்பட்டுள்ளன, தயாரிக்கப்பட்டுள்ளன, வாங்கப்பட்டுள்ளன, வைக்கப்பட்டுள்ளன, இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன, எடுத்து செல்லப்பட்டன, பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன அல்லது ஏதாவதொரு முறையில் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன என்று ஏதாவதொரு வியாபாரத்தின் போக்கில் அவருக்குத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கும்போது அதில் பங்கு கொண்டால் அல்லது அதனினின்று இலாபத்தைப் பெற்றால், அல்லது
(d )இச்சட்டப்பிரிவின் கீழ் ஒரு குற்றமாகின்ற ஏதாவதொரு செயலில், யாரேனும் ஒரு நபர் ஈடுபட்டிருக்கின்றார் அல்லது ஈடுபட தயாராகயிருக்கின்றார் என்று அல்லது யாரேனும் ஒரு நபரிடமிருந்து அல்லது நபர் மூலமாக ஏதாவதொரு அத்தகைய ஆபாசப் பொருளைப் பெறலாமென்று விளம்பரப்படுத்தினால் அல்லது ஏதாவதொரு முறையில் எந்த வழியிலும் தெரியப்படுத்தினால், அல்லது
(e) இச்சட்டப்பிரிவின் கீழ் ஒரு குற்றமாகின்ற ஏதாவதொரு செயலைச் செய்ய முனைந்தால் அல்லது முயன்றால்,
முதல் தண்டிப்பில், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், மற்றும் ரூபாய் இரண்டாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் மற்றும் இரண்டாவது அல்லது அதற்கு பிந்தைய தண்டிப்பில், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு சிறைத்தண்டனையுடன், மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடனும் தண்டிக்கப்பட வேண்டும்.
விதிவிலக்கு:-இச்சட்டப்பிரிவு பின்வருவனபவைகளுக்கு நீடிக்காது-
(a ).ஏதாவதொரு நூல், துண்டுப் பிரசுரம், செய்தித்தாள், எழுத்துரு, சித்திரம், ஓவியம், வெளிப்படுத்தல் அல்லது வரைபடம்-
(i )அத்தகைய நூல், துண்டுப் பிரசுரம், செய்தித்தாள், எழுத்துரு, சித்திரம், ஓவியம், வெளிப்படுத்தல் அல்லது வரைபடம் ஆகியவற்றின் வெளியீடு அறிவியல், இலக்கியம், கலை அல்லது கற்றல் அல்லது பிற பொது நோக்கங்கள் சம்பந்தமாக, பொது நன்மைக்கான நியாயமானதுதான் என நிரூபிக்கப்பட்டால் அல்லது
(ii )மத நோக்கங்களுக்காக வைக்கப்பட்டிருந்தால் அல்லது நல்லெண்ணத்தில் பயன்படுத்தப்பட்டால்,
(b )செதுக்கப்பட்ட, பதிக்கப்பட்ட, வர்ணம் செய்யப்பட்ட அல்லது பிறவகையில் பின்வருவனவற்றின் மேல் அல்லது அதனில் தெரியப்படுத்தப்பட்ட ஏதாவதொரு வெளிப்படுத்தல்-
(i )தொன்மையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் அழியாப் பகுதிகள் சட்டம், 1958(24/1958)இன் பொருளின்படியான ஏதாவதொரு தொன்மையான சின்னம் அல்லது
(ii )ஏதாவதொரு கோவில், அல்லது விக்கிரகங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஏதாவதொரு இரதம், அல்லது ஏதாவதொரு மத நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் அல்லது பயன்படுத்தப்படுபவை.
தமிழ்நாடு மாநில சட்டத்திருத்தம்:-
சட்டப்பிரிவு 292 இல்”மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக பின்வருவனவற்றைப் பதிலீடு செய்ய வேண்டும் அதாவது:-
“இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இருப்பினும், இச்சட்டப்பிரிவின் கீழான, ஒரு இரண்டாவது அல்லது ஏதாவதொரு பிந்தைய தண்டிப்பில் அவர், ஆறு மாதங்களுக்குக் குறைவில்லாத மற்றும் இரண்டு வருடங்களுக்கு மிகாத ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் மற்றும் அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளால் பதிலீடு செய்யப்பட வேண்டும்.
[தமிழ்நாடு சட்டம் 25/1960 இன் சட்டப்பிரிவு 2ஐப் பார்க்கவும்.(அமலுக்கு வந்த நாள் 09.11.1960)]
தமிழ்நாடு மாநில சட்டத்திருத்தம்:-
சட்டப்பிரிவு 292க்குப் பின்பு, பின்வரும் சட்டப்பிரிவு செருகப்பட வேண்டும், அவையாவது:-
292A .மிக அருவருப்பான, அல்லது கீழ்த்தரமான விஷயத்தை அல்லது மிரட்டிப் பறிக்கும் உள்நோக்கத்திலான விஷயத்தை அச்சிடுதல் முதலியன:-

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 56 (IPC Section 56 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 56 (IPC Section 56 in Tamil) ஐபிசி பிரிவு 56 – ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் அடிமைத்தன வேலைவாங்கும் தண்டனைவிதிப்பு…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 290 (IPC Section 290 in Tamil)

Posted by - நவம்பர் 11, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 290 (IPC Section 290 in Tamil) விளக்கம் எவரேனும், இத்தண்டனைச் சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாத ஏதாவதொரு பிற வழக்கில், ஒரு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன