இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 (IPC Section 294 in Tamil)
விளக்கம்
பிறருக்கு தொல்லை தரும் வகையில்:
பொது இடத்தில எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும், அல்லது
ஆபாசமான ஒரு பாடலைப் பாடினாலும் வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும்;
இந்த குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
ஆபாச செயல்கள் மற்றும் பாடல்கள்
எவரேனும், மற்றவர்களுக்கு எரிச்சலூட்டுகின்ற வகையில்:-
(a )ஏதாவதொரு பொது இடத்தில் ஏதாவதொரு ஆபாசச் செயலைச் செய்தால் அல்லது
(b )ஏதாவதொரு பொது இடத்தில் அல்லது அதன் அருகில் ஏதாவதொரு ஆபாசமான பாடலை, நாட்டுப்புறப் பாடலை அல்லது வார்த்தைகளைப் பாடினால், உச்சரித்தால் அல்லது கூறினால்,
மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க