இந்திய தண்டனை சட்டம் பிரிவு 366A (IPC Section 366A in Tamil)
விளக்கம்
பதினெட்டு வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணை, பிறருடன் கட்டப்புணர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய புணர்ச்சிக்கு அந்தப் பெண் உட்படுத்தப்படுவாள் என்று தெரிந்திருந்தும், அவளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும்படி, எந்த வகையில் தூண்டினாலும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க