இந்திய தண்டனை சட்டம் பிரிவு 382 (IPC Section 382 in Tamil)
விளக்கம்
திருடுவதற்காக அல்லது திருடியபின் பிடிபடாமல் தப்பிச் செல்வதற்காக அல்லது திருடிய பொருளைத் தன்னிடத்திலேயே வைத்திருப்பதாக மரணம் அல்லது காயம் அல்லது தடுத்தல் ஆகியவற்றுக்கான ஆயத்தங்களை செய்து விட்டு அல்லது மரணத்தைப் பற்றிய அல்லது காயம் உண்டாகும் என்ற அல்லது தடுக்கப்படுவோம் என்ற அச்சத்தைப் பிறருக்கு ஊட்டுவதற்கான ஆயத்தம் செய்துவிட்டு யாரேனும் திருடினால், அந்த நபருக்குப் 10 ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
உதாரணம்:
1. முனியனுடைய சொத்தை முருகேசன் திருடுகிறான். திருடும் பொழுது முனியன் தடுத்தால் அவனுக்கு காயம் உண்டாக்குவதற்கானத் தோட்டாக்கள் நிரப்பப் பெற்ற கைதுப்பாக்கியைத் தன் உடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறான். முருகேசன் இந்தப் பிரிவின் கீழ் குற்றவாளி ஆகிறான்.
2. ஒருவருடைய சட்டைப் பையிலுள்ள பொருளைத் திருடும்பொழுது தம்முடைய ஆட்களை அவரைச் சுற்றிவளைத்து கொண்டிருக்கும்படி செய்கிறான். திருடுவதைத் தடுப்பதற்கும் முயற்சி செய்தால் அவரைத் தடுப்பது தான் அவர்களுடைய வேலை, எனவே திருடும் நபர் இந்தப் பிரிவின்படி குற்றவாளி ஆகிறான்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க