இந்திய தண்டனை சட்டம் பிரிவு 489A (IPC Section 489A in Tamil)
விளக்கம்
ரூபாய்நோட்டுகளை அல்லது வாங்கிநோட்டுகளைப் போலியாகத் தயாரித்தாலும் அல்லது அவற்றைப் போலியாக்குவதற்கான வேலையில் எந்த ஒரு பிரிவையும் தெரிந்து செய்தாலும் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
விளக்கம்:
இந்த பிரிவிலும் 489 B, 489 C, 489 E ஆகிய பிரிவுகளிலும் வாங்கி நோட்டு என்று சொல்லப்படுவது அதை வைத்திருப்பவர், கேட்கும் போது பணம் பெறத்தக்க உத்தரவை அடங்கியுள்ள நோட்டைக் குறிக்கும். உலகின் எந்தப் பிரிவிலும் வாங்கி தொழில் நடத்தும் ஒருவரால், அத்தகைய நோட்டு அளிக்கப்பட்டாலும் அல்லது அதிகாரம் பெற்ற எந்த அரசாங்கத்திலும் அரசாலும் அளிக்கப்படலாம். வங்கிகளால் தரப்படும் கடன் உறுதிப் பத்திரங்களையும் இந்த சொல் குறிக்கும்.
இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க