- 1

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511 (IPC Section 511 in Tamil)

2468 0

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 511 (IPC Section 511 in Tamil)

விளக்கம்

இந்தச்சட்டத் தொகுப்பின்படி, ஆயுள் தண்டனை பெறத்தக்க அல்லது சிறைத் தண்டனை பெறத்தக்க குற்றத்தைப் புரிவதற்கு அல்லது குற்றம் செய்வதற்கான ஏற்பாட்டுக்கு முயற்சி செய்தாலும் அத்தகைய முயற்சியின் விளைவாக அந்தக் குற்றம் புரிவதற்கான எந்த செயலை புரிந்தாலும் அத்தகைய குற்ற முயற்சிக்கு இந்த சட்டத் தொகுப்பில் உரிய தண்டனை ஏதும் குறிப்பிடப்படவில்லையெனில், குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் அதில் பாதியையும் அல்லது வேறு தண்டனை குறிப்பிட்டிருந்தால் குறிப்பிடப்பட்டுள்ள உச்சக்கட்டத் தண்டனையில் பாதியையும் அந்த குற்ற முயற்சிக்குத் தண்டனையாக விதிக்கப்படும் அபராதம் மற்றும் இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
உதாரணம்:
அ) ஒருவருடைய பெட்டியில் உள்ள நகைகளைத் திருடுவதற்காக அந்த பெட்டியைத் திறக்கிறான். பெட்டியில் நகை ஏதும் இல்லை, திருடுவதற்காக என்று துவங்கி, அதற்கு உரிய செயல் ஒன்று புரியப்பட்டால், அந்த நபர் இந்தப் பிரிவின்படி குற்றவாளி ஆகிறான்.
ஆ) ஒருவருடைய சட்டைப்பையில் கையை விட்டுப் பணத்தை எடுக்க முயற்சி செய்யப்படுகின்றது. சட்டைப் பயில் ஒன்றும் கிடைக்கவில்லை, எனினும் பிறருடைய சட்டைப் பைக்குள் கையை விட்ட நபரை, இந்தப் பிரிவின்படி குற்றம் சாட்டித் தண்டிக்கலாம்.

இந்திய தண்டனை சட்டம் பற்றி மேலும் பார்க்க

Related Post

- 7

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 55 (IPC Section 55 in Tamil)

Posted by - நவம்பர் 1, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 55 (IPC Section 55 in Tamil) விளக்கம் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு நேர்விலும் உரிய அரசாங்கம் குற்றம்…
- 9

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 91 (IPC Section 91 in Tamil)

Posted by - நவம்பர் 2, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 91 (IPC Section 91 in Tamil) விளக்கம் சம்மதத்தைக் கொடுக்கிற நபருக்கு அல்லது எந்தநபர் சார்பாக சம்மதம் கொடுக்கப்பட்டதோ அந்நபருக்கு…
- 11

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 252 (IPC Section 252 in Tamil)

Posted by - அக்டோபர் 29, 2020 0
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 252 (IPC Section 252 in Tamil) விளக்கம் எவரேனும், நாணயத்தின் பொருட்டு உட்ப்பிரிவு 246 அல்லது 248ஆகிய ஏதாவதொன்றில் விவரிக்கப்பட்டுள்ள…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன