- 1

இந்த 6 உணவுகளும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்! உஷாரா இருங்க

140 0

இந்த 6 உணவுகளும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்! உஷாரா இருங்க

இன்றைய காலத்தில் பல பெண்களை அச்சுறுத்தும் கொடிய நோயாக மார்பக புற்றுநோய் உருவெடுத்துவிட்டது.

கருப்பைப் புற்றுநோயைவிட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.

பாரம்பரிய மரபியல் காரணங்களால் 90 சதவிகித பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படுவதில்லை.

ஆனால் வாழ்க்கை முறை மாற்றம், மது பழக்கம், உடல் பருமன், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது, உடற்பயிற்சியின்மை, ஹோர்மோன் சுரப்பில் குறைபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, இரசாயனம் கலந்த உணவு பொருளை பயன்படுத்துவது என பல காரணிகளை இதற்கான காரணமாக சொல்லலாம்.

இதிலும் இன்றைய காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகளே நமக்கு எதிரியாகவிட்டது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சில உணவுகளை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும்.

அந்தவகையில் தற்போது மார்பக புற்றுநோயிலிருந்து தப்பிக்க எந்த மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

  • அதிகப்படியான குடிப்பழக்கம், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ‘ ஹார்மோன் ரெசெப்ட்டார் பாசிட்டிவ்’ மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய பிற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கக் கூடும். ஆல்கஹால் ஆனது உயிரணுக்களில் உள்ள டி.என்.ஏ வை சேதப்படுத்தும். மேலும் இதன் காரணமாக, மார்பக புற்றுநோய் அபாயத்தை இது அதிகரிக்கும்.
  • அதிக துரித உணவை உட்கொள்வது உங்கள் உடல் எடையை அதிகரிக்கக் கூடும். மற்றும் நீங்கள் அதிக எடை அல்லது பருமனா உடலை பெற வாய்ப்பு உள்ளது. இது மார்பக புற்றுநோய் ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். மேலும், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது.
  • அதிகமான அளவில் வறுக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளவது உங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.
  • அதிகப்படியாக வறுக்கப்பட்ட சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்வது, மார்பக புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும். ஹைட்ரஜனேற்றப்படாத சோயாபீன் எண்ணெயை அதிக வெப்பநிலை கொண்ட சமையலில் பயன்படுத்தாவிட்டால், இது மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் குறைந்த அளவு தொடர்புடையது.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான பன்றி இறைச்சி , சாஸேஜஸ் மற்றும் ஹாம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மார்பக புற்றுநோயைத் தடுப்பதற்காக பதப்படுத்தப்பட்ட இறைச்சியைக் குறைத்து கொள்வது நல்லது.
  • அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது, உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும், இது மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • வெள்ளை ரொட்டி மற்றும் அதிகம் சர்க்கரை கொண்டு வேகவைத்த அல்லது சுட்ட பொருட்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸை உட்கொள்வதை நிறுத்துங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

இந்த 6 உணவுகளும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்! உஷாரா இருங்க Source link

Related Post

தாய்ப்பாலூட்டும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க... குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்!

தாய்ப்பாலூட்டும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க… குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்!

Posted by - அக்டோபர் 20, 2020 0
தாய்ப்பாலூட்டும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க… குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்! பொதுவாக பிரசவ காலங்களிலும் பிரசவத்திற்கு பின்னரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் தாய்பால்…
கர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

கர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா? பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளை சந்திப்பதுண்டு. இதில்…
- 5

நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
நீர்க்கட்டி உருவாவதற்கான அறிகுறி என்ன? இதற்கு தீர்வு உண்டா? பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக…
கர்ப்பம் தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல் என்ன தெரியுமா?

கர்ப்பம் தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல் என்ன தெரியுமா?

Posted by - அக்டோபர் 21, 2020 0
கர்ப்பம் தரித்த பெண்கள் பின்பற்ற வேண்டிய உணவு பட்டியல் என்ன தெரியுமா? கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை தேர்தெடுத்து உண்ணுவது அவசியமானது ஆகும். அந்தவகையில் கர்ப்பம்…
கர்ப்பிணிகளின் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் தெரியுமா?

கர்ப்பிணிகளின் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் தெரியுமா?

Posted by - அக்டோபர் 20, 2020 0
கர்ப்பிணிகளின் எந்த செயல்கள் குழந்தையை பாதிக்கும் தெரியுமா? பொதுவாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியமானது ஆகும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன