இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கணுமா? அதுக்கு இந்த ஜூஸ்களைக் குடிங்க…

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். பீட்ரூட் ஜூஸ் சில மணிநேரங்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆகவே உங்கள் வீட்டில் பீட்ரூட் இருந்தால், அதைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடியுங்கள். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பதோடு, இரத்த சிவப்பணுக்களின் அளவும் உடலில் அதிகரிக்கும்.

பசலைக்கீரை ஜூஸ்

பசலைக்கீரை ஜூஸ்

பசலைக்கீரையில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளது. இந்த கீரையில் பொட்டாசியம் வளமான அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியம் இரத்த நாளங்களின் பதட்டத்தைக் குறைத்து ரிலாக்ஸ் அடைய உதவும். இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தில் உள்ள ஏற்றம் குறையும். மேலும் பசலைக்கீரையில் லுடின் அதிகம் உள்ளது. லுடின் தமனிகளில் ஏற்படும் தடிப்பைத் தடுத்து, மாரடைப்பு மற்றும் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட்டில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது. கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, இதயம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைக்கும் மிகவும் நல்லது. முக்கியமாக கேரட் பெருந்தமனி தடிப்பு மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. அந்த அளவில் கேரட்டில் மருத்துவ குணங்கள் அதிகம் நிரம்பியுள்ளது.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ்

மாதுளையில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தடையில்லாத இரத்த ஓட்டத்திற்கு உதவும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. மாதுளை ஜூஸ் ஆஞ்சியோடென்சினை நொதிகளாக மாற்றுவதை எதிர்த்துப் போராடும் சிறப்பான பொருளாக அறியப்படுகிறது. இந்த நொதியானது இரத்த நாளங்களின் சுவர்களை கடினப்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்கக்கூடியது.

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி ஜூஸ்

கிரான் பெர்ரியை ஊட்டச்சத்துக்களின் கூடாரம் என்றே கூறலாம். அதோடு இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்திற்கு நல்லது. மேலும் இது கலோரி குறைவான ஜூஸ். இந்த ஜூஸ் இரத்த நாளங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கும், இரத்தத்தை முறையாகப் புழக்கப்படுத்துவதற்கும் உதவுகிறது.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அத்துடன் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் நேச்சுரல் சிட்ரஸ் பயோப்ளேவோனாய்டுகளையும் கொண்டது. இந்த ஜூஸைக் குடித்தால், அது இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுவதோடு, மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.

வெந்தய நீர்

வெந்தய நீர்

வெந்தயம் அல்லது வெந்தய நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதிலும் ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்து வந்தால், இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை பலருக்கு எவ்வாறு மற்றும் எதற்கு பயன்படுத்துவது என்றே தெரியவில்லை. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் பொருள். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுக்களை வெளியேற்றக்கூடியது. இந்த வினிகரில் உள்ள ரெனின் என்னும் நொதி தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் ஒரு டம்ளர் நீரில் சேர்த்து, சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த அழுத்தம் எகிறாமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள செல்களை சுத்தம் செய்யக்கூடியது. அதோடு இது இரத்த நாளங்களை மென்மையாக்கி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, உடலில் இருந்து ப்ரீ-ராடிக்கல்களை நீக்கும். எலுமிச்சையின் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், காலையில் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சியா விதை ஊற வைத்த நீர்

சியா விதை ஊற வைத்த நீர்

சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. இது இரத்த அடர்த்தியைக் குறைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். அதற்கு சியா விதைகளை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதை குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: