ravana kaviyam

இராவண காவியமும் ஆரிய திராவிட அரசியலும்

5230 0

இராவண காவியம்

    இராவண காவியம் “Ravana Kaviyam” ஒரு தமிழ் கவிதை நூல். இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. இதை இயற்றியவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எழுதப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.

இராவணன், பிரித்தானிய அருங்காட்சியகம்
இராவணன், பிரித்தானிய அருங்காட்சியகம்

எந்த ஒரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கம் இருக்கும். நம்மில் பெரும்பாலனவர்கள் ராமாயணம் படித்து / தொலைக்காட்சிகளில் பார்த்து இருப்போம்.

இதைப் பார்ப்பவர்கள் ராமன் கடவுள், மிக நல்லவன், எந்தத் தவறும் செய்யாதவன், ஒழுக்கமானவன், தேவர்கள் என்றால் நல்லவர்கள், அசுரர்கள் மோசமானவர்கள் என்ற எண்ணம் தான் இருக்கும். இதற்கு நம் எண்ணங்களும் பழக்கப்பட்டு இருக்கிறது.

இராவணன் சீதையைக் கடத்தினான் அதனால் பிரச்சனை ஆனது என்று தானே தெரியும், அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாதல்லவா! அது பற்றிக் கூறுவதே இந்த இந்த நூல்.

ராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை திறம்பட பாடியுள்ளார். இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது.

இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 – ஆம் ஆண்டு ஜூன் 2 – ஆம் தேதி தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.

[content-egg module=Amazon template=custom/compact next=1]

இராவணன் வரலாறு

Ravana Kaviyam - 3

      இராவணன் இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.

இராவண காவியம் eBook

இராவண காவியம்

இராவண காவியம் eBook Fre Download

பெயர் விளக்கம்

    இராவணன் – இரு ஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்று பொருளாகும். மேலும் இராவணன் என்பதற்குப் பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டு. இராவணன் – இராவண்ணன் (இரா=இருள்=கருமை) என இருளைப் போன்ற கருமை நிறமுடையவன் என்று பொருளாகும் வண்ணமும் உள்ளது.

     இராமாயணத்தில் இராவணனுக்குப் பத்துத் தலைகள் கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகிறது. இங்கே பத்து தலைகள் என்பது பத்து துறைகளில் தலைசிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதுவாகும். சிறந்த வீணை வித்துவான், சிறந்த சிவபக்தன், சிறந்த போராட்டல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயசிங்கள் கொண்டவன் என பொருள்.

சிவபக்தன் இராவணன்

ravana temple
திருகோணமலையில் இராவணன் சிலை

        ராவணன் சிவனுடைய பக்தனாக எப்பொழுதும் திருநீர் அணிந்திருப்பவர். சிவனது வீதியுலாவின் பொழுது பத்து தலைகொண்ட இராவணனது உருவம் சுவாமி வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. இலங்கை என்றும் அழியாமல் இருக்க, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் இராவணன். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆத்மலிங்கத்தினை இராவணனுக்கு தந்தார். இதை இலங்கையில் வைக்கும் வரை தரையில் எங்கும் வைக்கவேண்டாமென அறிவுரையும் கூறினார். ஆனால் தேவர்களின் சூழ்ச்சியால் இராவணனால் அந்த ஆத்ம லிங்கத்தினை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இராவணனும் கோண்டு மக்களும்

         த்தியப் பிரதேசம், குசராத், ராஜஸ்தானில் வசிக்கும் கோண்ட் பழங்குடி மக்கள் ராவணனின் பிறந்த இடமாக பிஸ்ராக் என்ற ஊரைக் கருதுகின்றனர். இது தில்லியின் கிரேட்டர் நொய்டா அருகில் உள்ளது. ராவணனுடைய மனைவி மண்டோதரி மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவில் பிறந்தவர் என்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது. இராவணனனைத் தங்கள் பரம்பரையில் வந்தவராகக் கூறும் கோண்ட் இனத்தவர்கள், தாங்கள் குடியேறும் இடங்களில் இராவணனுக்குச் சிலையெழுப்பி, தசரா காலத்தில் துக்கம் அனுஷ்டித்து கடைசி நாளில் ராவணனுக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர்

இராவணன் கோயில்கள்

 • ராவணன் கோவில் , பிஸ்ரக்ஹ் ,கிரேடர் நொய்டா ,உத்தர பிரதேசம்,இந்தியா.
  இது இராவணனின் பிறந்த ஊராக அறியபடுகின்றது .மேலும் ராவணன் இறந்த தினமான தசரா அன்று ராவணனுக்கு துக்கம் கடைபிடிப்ப படுகின்றது .
 • இராவணன் கோவில், இராவண கிராமம், விதிஷா மாவட்டம் ,மத்தியப் பிரதேசம்,
  இந்த கிராமத்திலுள்ள  இராவணன் கோவிலில் பூசைகளும் ,நெயவேத்தியங்களும் தினமும் அனுசரிக்கபடுகின்றன.
 • இராவணன் கோவில் ,கான்பூர் ,உத்தர பிரதேசம்,இந்தியா
  சில நுற்றாண்டுகளுக்கு முன் சிவஷங்கர் என்னும் மன்னனால் இது கட்டப்பட்டது. இது வருடத்திற்கு ஒருமுறை தசரா தினமன்று திறக்க படுகின்றது. அன்று இராவணனின் நலனுக்காக சிறப்பு இங்கு பூஜைகளும் சடங்குகளும் செய்யபடுகின்றன.
 • இராவணன் கோவில், ஜோத்பூர் /மண்டூர் ,குஜராத் .இந்தியா
  இவர்கள் தாங்கள் இராவணனின் வழிதோன்றல்கள் என கூறுகின்றனர் ,மேலும் இராவணன் இறந்த தினமான தசரா அன்று இராவணனுக்கு துக்கம் கடைபிடிப்பதோடு , அன்றைய தினம் பிண்டம் வைத்து தென்புலத்தார் கடனையும் தவறாமல் செய்து நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

இராவணனின் இல்லறம்

Ravi_Varma-Ravana_Sita
ராஜா ரவிவர்மாவின் ஓவியம்: ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன்

        சுரர்கள் பொதுவாகவே மேம்பட்ட, முற்போக்குக் கலாச்சாரத்தைக் கொண்டு இருந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிவனை வழிபடும் இவர்கள் தேவர்களையும் அவர்களுக்குத் துணை இருக்கும் பிராமணர்களையும் மிகவும் வெறுக்கிறார்கள்.
இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவியின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகன்னன், பீடணன் என மூன்று ஆண் குழந்தைகளும், காமவல்லி என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டார்.முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் சேயோன் என்ற மகன் பிறந்தான்.

ஆரியர் வருகை

          டநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேறினார்கள். அங்கு கோசிகன் (விசுவாமித்திரர்) போன்ற முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை என்பவர் இராவணனுக்கு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனுடன் தன் சேனையை அனுப்பினார். கோசிக முனிவரின் யாகம் தடைப்பெற்றது.

இராம சகோதரர்களின் கொலைகள்

                       ரியர்கள் வேள்வியில் உயிர்களைப் பலி கொடுத்து உண்டு வந்தனர். தமிழர்கள் அதனைத் தடுத்தனர். அப்படியும் அவர்கள் உயிர்க்கொலை வேள்வியைத் தொடர்ந்து செய்து வந்தனர்.

தாடகை

   யிர்க்கொலையைத் தடுக்க வேண்டி இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகையின் வேண்டுகோளை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனை அனுப்பினான். சுவாகு இடைவள நாட்டில் நிகழ்ந்த புலைவேள்வியை அகற்றினான். கோசிகன் என்னும் ஆரிய முனிவன் வேள்வி செய்ய இயலாது மனமுடைந்தான்.

வேள்வி தடைப்பட்டதால் கோசிக முனிவர் (விசுவாமித்திரர்) அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனை தடுக்க முயன்ற தாடகை, சுவாகு, மாரீசன் மூவரும் இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள்.

காமவல்லி

     இவர்களுக்கு துணையாக இருந்த இராவணனின் தங்கை காமவல்லியை கண்ட இராமன் அவளின் அழகாள் காமமுற்று, அவளை வற்புருத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இனங்காததால், இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்தான், இராவணன் தன்னுடைய தங்கையை பாதுகாக்க கரன் எனும் படைத்தலைவனை விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இராவணன் தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றார். பின்பு இராவணனின் தங்கையயும் கொலை செய்யப்பட்டால்.

இராமன் இன வெறியன்!

sampugan vatham
சம்பூகன் வதம்
 • மரங்களுக்கு பின்னால் மறைந் திருந்து திடீர் என அம்பெய்தி வாலியைக் கொல்கிறான்!

‘சம்பூகன்’ என்கிற சூத்திரன் (திரா விடன்) காட்டில் உள்ள ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு ஆண்டவனை நோக்கி தவமிருந்தான், இதை அறிந்த இராமன் (ஆரியன்) காட்டிற்கு சென்று ‘சம்பூக’னைக் கண்டு ‘சூத்திரன் ஆண்டவனை நோக்கி தவ மிருக்க எனது இராஜ்ஜியத்தில் இட மில்லை’ என்று கூறி,

வாளை உருவி ‘சம்பூக’னின் தலையை வெட்டிக் கொன்றான்.”

(வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம்.

 • இராமன் விலங்குகளை கொன்று தின்றவன்!”இராமன் சாப்பிடும் பொருள்களில் மது, மாமிசமும் அடங்கியிருக்கும்.”

(வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம், சருக்கம் -43, சுலோகம் -1)

– நூல்: ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’- அம்பேத்கர்

[content-egg module=Amazon template=custom/compact next=1]

ஆரியரின் யாகங்கள்

          கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர்.

தாடகை
இலக்குமனன் தாடகையின் மூக்கருத்தல்

    சுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

        ரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.

சில அசுரர்கள் பெயர்கள்

 • இராவணன்
 • சுக்கிராச்சாரியார் (அசுரர்களின் குல குரு)
 • இரணியாட்சன்
 • இரணியகசிபு
 • பிரகலாதன்
 • மகாபலி சக்கரவர்த்தி
 • விரோசனன்
 • சலந்தரன்
 • விருத்திராசூரன்
 • ரத்த பிந்து
 • மயன் – அசுர சிற்பி
 • விருசபர்வன்
 • சண்டன்
 • முண்டன்
 • சுபர்பானு
 • சூரபதுமன்
 • பானுகோபன் -சூரன் மகன்
 • தாரகன் -சூரனின் தம்பி
 • சோமுகாசுரன்
 • மகிசாசூரன்
 • மகசி – மகிசாசுரனின் தங்கை
 • சுந்தன் – உபசுந்தன்
 • சும்பன் – நிசும்பன்
 • கும்பகர்ணன்
 • வீடணன்
 • சூர்ப்பனகை
 • இந்திரஜித்
 • மாரீசன்
 • கரன்
 • தாடகை
 • கைகஸி – இராவணின் தாய்
 • நரகாசுரன்
 • இடும்பி – பீமனின் மனைவி

              பிராமண வேடத்தில் வரும் அனுமானின் காலில் ராமன் விழுந்து வணங்குகிறார். அனுமான் பதறி ராமா, நான் உங்கள் பக்தன் நீங்கள் என் காலில் விழுந்து வணங்குகிறீர்களே என்று கேட்க, அவன் கடவுளே ஆனாலும் , பிராமணன் எதிரில் வந்தால் வணங்க வேண்டும் என்கிறார்.
சம்பூகன் என்ற ஒரு சூத்திரன் தவம் செய்யும் போது , பிராமிணர்கள் ராமரிடம் முறையிட்டு, எப்படி ஒரு சூத்திரன் நேராக கடவுளை தொழ முடியும் ,எங்களை தானே தொழ வேண்டும் என்று கூற, ராமர் வந்து அவனை கொலை செய்கிறான்.

மகாபாரதத்தில்

                       நாரதர் கிருஷ்ணரை பார்க்க வருகிறார். அப்போது கிருஷ்ணன் கதவை பூட்டி வழிபட்டு கொண்டு இருகின்றார் . நாரதர் வியப்புடன் சர்வ சக்தி கொண்ட எம்பெருமானே வழிபடும் கடவுள் யார் என்று ஆவலுடன் பார்க்க , அங்கு ஒரு பிராமண சிலை உள்ளது. அதன் முன் கிருஷ்ணன் அமர்ந்து இருக்கிறார். இதன் பொருள் என்ன?

முன்னால் பாரத பிறதமர் நேரு’வே சொல்லி இருக்கிறார், ராமாயணம் என்பது தென் இந்திய மக்களை இழிவு செய்ய எழுதிய நூல் என்று.

–  The Discovery of India என்ற நூலில் ,

சீதையை இராவணன் கவர்தல்

படைத்தலைவனும்,தங்கையும் கொல்லப்பட்ட செய்தியை தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், விந்தகம் வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி இராம சகோதர்களை சீதையிடமிருந்து பிரித்தார். பின்பு சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் தன் தங்கையாக போற்றினார்.

பீடணன் வெளியேறல்

 இராவணன் அரசவையில் இராமனை எதிர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பீடணன் எதிர்ப்பு தெரிவித்தார். சீதை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது என்றார். பீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதானால் பீடணன் தன் படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினார்.

கும்பகன்னன், சேயோன், இராவணன் வீர மரணம்

              ராமனுக்கும் இராவணுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகன்னன் போரில் வீர மரணமடைந்தார். அதனை கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணன் அவருடைய மகன் சேயோன் தேற்றினார். அதன் பின் சேயோனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டார்.

  ராமனால் இராவணனின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டார், பீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன. மாதலி என்பவர் கொடுத்த அம்பினை இராமன் எய்தார். அதன் மூலம் இராவணனும் வீரமரணம் அடைந்தார்.

இராவணன் தேவர்களுடன் / ராமனுடன் போர் விதிமுறைகளுடன் நேர்மையாகப் போர் புரிவதாலே பல இன்னல்களை எதிர்கொள்ள நேர்கிறது.

இராமாயணம்

[content-egg module=Amazon template=custom/compact next=1]

           இராமாயண கதை பல நாடுகளில் பல மொழிகளில் வாய்மொழி கதைகளின் அடிப்படியில் பலரால் எழுதப்பட்டுள்ளது, 300 க்கும் மேற்ப்பட்ட இராமாயண கதைகள் உலவுகின்றத. இவற்றில் பல கதைகளும் கதாப்பாத்திரங்களும் வெவ்வேறு பதிப்புகளிள் வேறுபடுகின்றது, சஉதாரணமாக சில கதைகளில் இராவண்ணும் சீதையும் அப்பா மகள் உறவு, அண்ணண் தங்கை உறவு எனவும், சில கதைகளிள் ராமன் குடிகாரன், பல திருமணம் செய்தவர் எனவும் கூறப்படுகிண்றது.

இவ்வாறு, பல இந்திய மொழிகளிலும், ( தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். ) பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை.

வால்மீகி இராமாயணம்

         இவ்வாறே,  வாய்மொழி கதைகளின் அடிப்படியில் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இராமாயணம் இயற்றப்பட்டது. இது கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் – கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:

 • பால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.
 • அயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி.
 • ஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும்.
  கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை.
 • சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.
 • யுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.
 • உத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.

ந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.

கம்ப இராமாயணத்தின் இறுதிக் காண்டமாக உத்தர காண்டத்தை கப்பர் எழுதவில்லை, காரணம் அதில் ராமனை பற்றி பல உண்மைகள் தெறிந்துவிடும் என்பதாலோ என்னவோ உதாரண்மாக சம்பூகன் வதம், ஆனால் ஒட்டக்கூத்தரால் இந்த உத்தர காண்டம் தமிழில் இயற்றப்பட்டது.

கம்பராமயணத்தை படித்து போற்றுவோர் பலரும் ( உத்திரகாண்டம் மறைக்கப்படுகிண்றது. ) உத்திரகாண்டத்தை படிப்பதில்லை.

புலவர் குழந்தை

 புலவர் குழந்தைபுலவர் குழந்தை (ஜூலை 1, 1906 – செப்டம்பர் 22, 1972) தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கல்வி

     லகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப் பயிற்சி செய்யும் திண்ணைப் பள்ளியொன்றில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார் குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவருடைய பொழுது போக்கு பாட்டெழுதுவது. 1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி

                       புலவர்குழந்தை ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். 37 ஆண்டுகள் பணிபுரிந்தார். பவானி நகரில் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகவும் பணிபுரிந்தார்.

இல்வாழ்க்கை

                   புலவர்குழந்தை முத்தம்மை என்பாரை திருமணம் புரிந்தார்.

இலக்கியப்பணி

                       Ravana Kaviyam - 101926இல் புலவர் குழந்தை எழுதிய ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு, வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து, வீரகுமாரசாமி காவடிச்சிந்து, வெள்ளகோவில் வழிநடைச்சிந்து ஆகியவை அச்சாயின.

தந்தை பெரியாரின் மீது மரியாதையும், சுய மரியாதை கொள்கை மீது பற்றும் கொணடவர். 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.

           பெரியார் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அறிஞர் குழு ஒன்றினை அமைத்தார் அதில் முக்கியமானவர் புலவர் குழந்தை. இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதினார். இந்த உரையுடனே திருக்குறள் குழந்தையுரை என்ற நூல் வெளியிடப்பட்டது.

பள்ளியாசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்கள் யாப்பருங்கலக்காரிகை கற்று கவிபாடுவதில் உள்ள சிரமமறிந்து, அதை முற்றிலும் எளிமையாக்கி ”யாப்பதிகாரம்” என்ற நூலை வெளியிட்டார். இதில் எளிய பயிற்சி மூலம் எவரும் கவிபாடும் ஆற்றலை பெற வழி செய்தார். அதைப் போலவே தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் முழுமைக்கும் எளிய உரை எழுதி அனைவரையும் கற்கும்படி எளிதாக்கினார்.

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இந்னூல் என்னும் இலக்கண நூற்பா நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து தொடையதிகாரம் என்ற நூலும் வெளிவந்தது. கொங்குநாட்டின் மீதும் அங்கு வளர்ந்த தமிழ் புரவலர் மீதும் பற்றுகொண்ட குழந்தையவர்கள் கொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறுகளைத் தொகுத்து கொங்குநாடும் தமிழும், கொங்குகுலமணிகள், கொங்கு நாடு ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டார்.

தொல்காப்பியர் காலத்தமிழர் வாழ்க்கைப் பண்பு நலன்களை ஆராய்ந்து ”தொல்காப்பியர் காலத்தமிழர்” என்ற நூலையும் எழுதினார். இவர் எழுதி இதுவரை வெளிவந்த நூல்கள் மொத்தம் முப்பத்திநான்கு. அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரிசையில் 3, இலக்கணப் பாங்கில் 3 , உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன.

குழந்தை எழுதிய நூல்களுள் ”இராவண காவியம்” புகழ் பெற்றது. இது 1948 இல் காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.

[content-egg module=Amazon template=custom/simple_list]

Related Post

thamizh dna

இராமலிங்க அடிகள் | வள்ளலார் வரலாறு

Posted by - டிசம்பர் 16, 2017 0
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்.…
thamizh DNA

திருவள்ளுவர் பற்றிய அறிய தகவல்கள்

Posted by - மே 14, 2020 3
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த…
கடையெழு வள்ளல்கள் pdf

7 பேர் மட்டும் தான் வள்ளல்களா !

Posted by - ஜூன் 23, 2019 0
அது ஏன்  7 பேர் மட்டும் தான் வள்ளல்களா ? மற்ற வள்ளல்களுக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன தான் வித்தியாசம் உள்ளது.! பார்க்களாம் வாங்க.
குமரியில் தொல்காப்பியர் சிலை

தொல்காப்பியர் | தொல்காப்பியம் பற்றி கொஞ்சம் …

Posted by - டிசம்பர் 14, 2017 0
தொல்காப்பியர், தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் ஆவார். தொல்காப்பியர் காலம் கி.மு. 4200 ... தொல்காப்பியம் போன்ற ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன