உங்கள் உடல் கச்சிதமாக இருக்க தினமும் 10 நிமிடம் இந்த உடற்பயிற்சிகளை செய்தால் போதும்
கொரோனா எதிரொலியால் தற்போது மக்கள் வீட்டில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் வெளியில் செல்லாமல் உடல் உழைப்பு சற்று குறைவு தான் என்பதால் மிக எளிதாக எடை கூட வாய்ப்பு உள்ளது.
இதற்காக ஜிம்மிற்கு சொல்லமுடியவில்லையே என்ற கவலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து கூட சில உடற்பயிற்களை செய்தாலே போதும் கச்சிதமான உடல் அமைப்பை பெற முடியும்.
அந்தவகையில் வீட்டில் இருந்தப்படியே செய்யக்கூடிய சில எளிய உடற்பயிற்சிகளை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
ஜம்பிங் ஜாக்
கைகள் மற்றும் கால்களை வெளிப்புறமாக சுற்றியபடி குதிக்கும் பயிற்சி இது. சைடு ஸ்டிரேடல் ஹாப் என்றும் சொல்லப்படுகிறது.
வால் சிட்ஸ்
சுவரில், முதுகை நோக்கிய படி நிற்கவும். பாதங்களை சற்று முன்னோக்கி வைத்திருக்கவும்.
நாற்காலியில் உட்கார இருப்பது போல, மெல்ல சரிந்து வரவும். முட்டியை 90 டிகிரி கோணத்தில், குதிகாலுக்கு மேல் வைத்திருக்கவும்.
புஷ் அப்
தரையில் கைகளை ஊன்றியபடி, முதுகை நேராக வைத்துக்கொண்டு, உடலை மேலும் கீழும் கொண்டு வரவும்.
அப்டாமினல் கிரன்சஸ்
முதுகு தரையில் படும்படி படுக்கவும். பாதம் தரையில் பட, முழங்காலை மடிக்கவும். முதுகை உயர்த்தவும். பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.
சேர் ஸ்டெப் அப்ஸ்
இடது காலை வைத்து ஊன்றி ஸ்டூல் மீது ஏறவும். கீழே இறங்கி, வலது காலை ஊன்றி ஏறி நிற்கவும். 30 நொடிகள் மாற்றி மாற்றி செய்யவும்.
ஸ்குவாட்ஸ்
கால்களை விரித்தபடி நிற்கவும். முழங்காலை மடக்கி, இடுப்பை மலம் கழிக்கும் நிலைக்கு இறக்கவும்.
உடல் எடை குதிகாலில் இருக்க வேண்டும். ரிப்பீட் செய்யவும்
டிரைசெப் டிப்
கைகளை பெஞ்ச் மீது அகல வைக்கவும். முழங்காலை மடக்காமல், பாதங்களை நீட்டி, உடலை கீழே கொண்டு வரவும்.
மீண்டும் பழைய நிலைக்கு வந்து இதே போல செய்யவும்.
பிளாங்ஸ்
முழங்கையை உடல் அருகே வைத்தபடி, வயிற்றை தரையில் வைத்தபடி படுத்திருக்கவும். கைகள் மற்றும் பாதங்களை ஊன்றியபடி வயிறு மற்றும் தொடைகளை மேலே உயர்த்தவும்.
ஹை-நீ ரன்னிங்
நின்ற படி வேகமாக ஜாக் செய்யவும். கால்களை முடிந்தவரை உயர்த்தவும்.
லஞ்சஸ்
முழங்காலை லேசாக மடித்த படி, ஒரு காலை 3 அடி முன்னே நிற்கவும்.
முழங்கால் 90 டிகிரி கோணத்தில் வரும் வகையில், இடுப்புப் பகுதியை கீழே கொண்டு வரவும்.
முன் காலால் பின் பக்கம் வந்து பழைய நிலைக்கு வரவும். மற்றொரு காலால் செய்யவும்.
…
உங்கள் உடல் கச்சிதமாக இருக்க தினமும் 10 நிமிடம் இந்த உடற்பயிற்சிகளை செய்தால் போதும் Source link