- 1

உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க

100 0

உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க

சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலோஜன் உற்பத்தி குறைவதால் கைகள் மற்றும் மற்ற இடங்களில் அசிங்கமாக தசைகள் உண்டாகிறது.

இதனை உடற்பயிற்சி மூலம் கூட போக்க முடியும். அந்தவகையில் தற்போது அசிங்கமாக தொங்கும் கைத்தசைகளை குறைக்க கூடிய எளிய பயிற்சி முறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

புஷ் அப்ஸ் (Push Ups)
- 3
lesmills

முதலில் தட்டையான இருக்கையில் முட்டி தரையில் படும் படி படுங்கள்.

கீழே நோக்கிய நிலையில் இருக்கும் போது, உங்களின் முழு எடையையும் முட்டி மற்றும் கைகளில் ஏத்திடுங்கள்.

நல்ல பயனை பெற தினமும் 15 முதல் 20 புஷ் அப் வரை எடுங்கள். இது நெஞ்சு மற்றும் கைகளில் உள்ள தசைகளை திடமாக்கி வலுவடையச் செய்யும்.

ட்ரைசெப்ஸ் டிப்ஸ் (Triceps Dips)
- 5
pinterest

கைகளின் பின்புறம் வலுவடைய ட்ரைசெப்ஸ் டிப்ஸ் முறையை கையாளலாம்.

நாற்காலியின் நுனியில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி, உங்கள் கால்களை நாற்காலியில் இருந்து சற்று தள்ளி தரையில் படும் படி நீட்டிக் கொள்ளுங்கள்.

கால்களை நேராக நீட்டி நாற்காலியை விட்டு விலகி வைத்து, உடலின் மொத்த எடையையும் கைகளில் ஏத்திடுங்கள்.

பின் மெதுவாக உடலை நேராக இறக்கி முழங்கை 90 டிகிரி திரும்பும்படி செய்யுங்கள்.

இப்போது கைகளின் பின்புற தசைகளை அழுத்தி, மீண்டும் உடலை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள்.

முதலில் பாதங்களை தரையில் நேராக வைத்து, முட்டி மடங்கிய நிலையில் இருக்க வேண்டும்.

ஆனால் ப்ராக்டிஸ் செய்து உடலின் மேல் பகுதிக்கு வலு சேர்க்கும் போது, கால்களை விரித்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து 15 முதல் 20 முறை செய்யலாம்.

ட்ரைசெப்ஸ் பிரஸ் (Triceps Press)
- 7
coachmag.co

ஆரம்பிக்க நாற்காலியில் அமரலாம் அல்லது நின்று கொள்ளலாம். உங்கள் முதுகை நேராக வைத்து கொண்டு 3-5 பவுண்ட் எடை உள்ள ஒரு கர்லாக்கட்டையை (டம்ப் பெல்) தலையின் மேல் தூக்குங்கள்.

இப்போது முழங்கையை மடித்து எடை அனைத்தும் தலையின் பின்பக்கம் செல்லுமாறு செய்யுங்கள்.

இதன் பின் முழங்கையை நேராக்கி ஆரம்பித்த நிலைக்கு மீண்டும் செல்லுங்கள்.

இதனை ஆரம்பத்தில் 15 முதல் 20 முறையும், படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

ட்ரைசெப்ஸ் கிக் பேக் (Triceps Kickback)
- 9
Image Source: POPSUGAR Studios

கைகளின் பின்புறத்தை வலுவடைய செய்யும். இந்த பயிற்சியில் இடுப்பு வரை வளைந்து தொடங்க வேண்டும்.

அப்படி செய்யும் போது உடலின் எடையை தாங்க, ஒரு கையை நேராக நீட்டி ஒரு நாற்காலி, மேஜை அல்லது சோபா மீது வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு கையில் டம்ப் பெல் ஒன்றை பிடித்து கொண்டு, உங்கள் முழங்கை 90 டிகிரி கோணத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ட்ரைசெப்ஸ் தசைகளை இறுக்கி, கைகளை நேராக்க டம்ப் பெல்லை பின்புறம் கொண்டு சென்று, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு கொண்டு வாருங்கள்.

உங்க கைகளில் அசிங்கமாக தொங்கும் அதிகப்படியாக தசையை குறைக்க வேண்டுமா? இந்த உடற்பயிற்சிகளை செய்திடுங்க Source link

Related Post

thamizh dna

‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ?

Posted by - ஜனவரி 24, 2021 0
‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சி தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன ?   உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் விரைவாக பலனை எதிர் பார்க்க ஜம்பிங்…
- 14

தட்டையான வயிற்றை பெற வேண்டுமா? இதோ எளிய உடற்பயிற்சிகள்

Posted by - அக்டோபர் 22, 2020 0
தட்டையான வயிற்றை பெற வேண்டுமா? இதோ எளிய உடற்பயிற்சிகள் உடற் பயிற்சிகள் பெரும்பாலும் உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவி புரிகின்றது. அந்தவகையில் தட்டையான வயிற்றை பெறவும்,…
பெண்களே தளர்ந்த மார்பகங்களை உறுதியாக்கணுமா

பெண்களே தளர்ந்த மார்பகங்களை உறுதியாக்கணுமா? இந்த 7 ஆசனங்களை செய்து பாருங்க

Posted by - ஜனவரி 24, 2021 0
பெண்களே தளர்ந்த மார்பகங்களை உறுதியாக்கணுமா? இந்த 7 ஆசனங்களை செய்து பாருங்க   பெண்கள் தொய்கின்ற மார்பகத்தை சரி செய்ய அறுவை சிகிச்சைக்கு செய்யாமல் சில இயற்கை…
பெண்களே தளர்ந்த மார்பகங்களை உறுதியாக்கணுமா

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க இந்த மூன்று ஆசனங்களை செய்து பாருங்க!

Posted by - நவம்பர் 17, 2020 0
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க இந்த மூன்று ஆசனங்களை செய்து பாருங்க!   இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது.…
- 18

அதிக உடல் எடையை குறைந்த நேரத்தில் குறைக்க வேண்டுமா? இந்த 6 பயிற்சி மட்டும் செய்து பாருங்க.

Posted by - அக்டோபர் 20, 2020 0
அதிக உடல் எடையை குறைந்த நேரத்தில் குறைக்க வேண்டுமா? இந்த 6 பயிற்சி மட்டும் செய்து பாருங்க. இன்று உடல் எடையினால் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன