Wellness
lekhaka-Saravanan kirubananthan
இந்தியர்களுக்கு தேநீர் என்பது சுவையான பானம் மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டே தேநீர் பருகுவது, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் பருகுவது, காதலர்கள் நீண்ட நேரம் பேசிக் கொன்டே தேநீர் பருகுவது என்று எல்லா இடத்திலும் நம் உணர்வுகளோடு கலந்த ஒரு பானம் தேநீர். ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு முறை தேநீர் பருகுவதை பலர் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

பால் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு உடலுக்கு பெரிதாக எந்த ஒரு நன்மையையும் செய்வதில்லை. உண்மையில், பால் சேர்க்காமல் தயாரிக்கும் தேநீர் பருகவே பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இந்நாட்களில் பலரும் மூலிகை தேநீர் பருகுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் கூட வெவ்வேறு வகையான தேநீர் பருகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
MOST READ: மூட்டு வலி இருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்பது உண்மையா?
குறிப்பாக க்ரீன் டீ, மல்லிகை டீ, ரோஜா டீ, சாமந்தி பூ டீ போன்றவை பலரும் விரும்பி சுவைக்கும் தேநீர் வகையாக உள்ளது. இந்த வகை தேநீரில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எடை இழப்பு, கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு, மனநல ஆரோக்கியம் போன்றவை அவற்றுள் சில. சிறப்பான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள சில இயற்கை தேநீர் வகைகளை சுவைத்து பார்க்கலாம். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
MOST READ: இருமல் வந்தாலே கொரோனா வைரஸா இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க…
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காலையில் எழுந்தவுடன் மஞ்சள் தேநீர்
காரணம் – அழற்சி எதிர்ப்பு
பெட் காபி , பெட் டீ பருகும் பழக்கம் பலருக்கும் உண்டு. அந்த நாளை உற்சாகத்தோடு தொடங்க அவர்களுக்கு ஒரு கப் தேநீர் மிகவும் அவசியம். இன்று வரை நீங்கள் பால் டீ பருகி அந்த நாளை தொடங்குவீர்கள் என்றால் நாளை முதல் மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்பட்ட தேநீருக்கு மாறுங்கள். மேலும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக வெதுவெதுப்பான நீர் பருக வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்கு மாற்றாக நீங்கள் மஞ்சள் கலந்த தேநீர் பருகலாம். மஞ்சளுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வயிற்றில் உள்ள நச்சுகளை வெளியேற்ற எளிதாக உதவி புரிந்து உங்களை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. இந்த தேநீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் லவங்க பட்டை சேர்த்து பருகுவதால் உங்கள் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் மேலும் அதிகரிக்கும். இந்த தேநீர் எடை இழப்பிற்கு சிறந்த தீர்வைத் தரும்.

காலை மற்றும் மதியத்திற்கு இடையில் – க்ரீன் டீ
காரணம் – வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
முழு நாளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் உங்கள் வளர்சிதை மாற்றம் உயர்ந்து இருக்க வேண்டியது அவசியம். ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ள க்ரீன் டீ இந்த நேரத்திற்கு ஏற்ற ஒரு தேநீராகும். இந்த தேநீர் சிறிது கசப்பு சுவை கொண்டதாக இருக்கும். நறுமண சுவை சேர்க்கப்பட்ட க்ரீன் டீ பருகுவதால் கசப்பு சுவை சிறிது குறையலாம். க்ரீன் டீ பல்வேறு பிராண்டுகளில் வருகிறது. உங்களுக்கு விருப்பமான ப்ராண்ட் வாங்கி நீங்கள் சுவைக்கலாம்.
குறிப்பு: க்ரீன் டீயில் சிறிதளவு எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து பருகுவதால் அதன் சுவை அதிகரிக்கும்.

மதிய வேளை – ப்ளாக் டீ
காரணம் – ஆற்றல் மற்றும் கவனம் அதிகரிக்கும்
ஒரு நாளின் பாதி வேலைகள் முடிந்திருக்கும் என்பதால் தானாகவே சோர்வு உங்களை தொற்றிக் கொள்ளும். மீதி நாளை உற்சாகமாக கடந்து செல்ல உங்களுக்கு ஆற்றல் மற்றும் கவனம் தேவை. இதனை வழங்க ப்ளாக் டீ ஒரு நல்ல தேர்வு. நீங்கள் உங்கள் பையில் எப்போது ப்ளாக் டீ பைகளை வைத்துக் கொள்ளலாம். ப்ளாக் டீ பருகும் போது சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் ப்ளாக் டீ பருகும் நன்மை குறைந்துவிடும். மதிய உணவிற்கு பின் ப்ளாக் டீ பருகுவதால் மயக்கம் போன்ற பாதிப்புகள் தவிர்க்கப்படும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன் – சீமைச்சாமந்தி பூ தேநீர்
காரணம் – மன அமைதி மற்றும் ரிலாக்ஸ் உணர்வு
மனதை தளர்த்தவும் அமைதிப்படுத்தவும் உதவும் ஒரு அற்புதமான டீ தான் சீமைச்சாமந்தி பூ டீ. ஒரு நாள் முழுவதும் வேலை செய்த சோர்வின் காரணமாக அமைதியான மற்றும் ஓய்வான உறக்கம் தேவை. குறிப்பாக இடையூறு இல்லாத உறக்கம் மிகவும் அவசியம். படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக சீமைச்சாமந்தி பூ டீ பருகுவதால் சிறந்த உறக்கம் வருவதை உங்களால் உணர முடியும்.
மனஅழுத்தம் அல்லது மன நல பாதிப்பு இருக்கும் எந்த நேரத்திலும் நீங்கள் இந்த டீயை பருகலாம். இதனால் உங்கள் மூளை புத்துணர்ச்சி பெறுவது உறுதி.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்