பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்
உ வரிசை கிரந்தம்
# | பிறமொழி சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | உக்கிரம் | கடுமை தீவிரம் |
2 | உச்சரி | (எழுத்தை சொல்லை)ஒலித்தல் (ஒரு சொல்லை)சொல்லுதல் |
3 | உச்சரிப்பு | (எழுத்தின் ,சொல்லின்) ஒலிப்பு முறை (மந்திரம் முதலியவை)சொல்லும் முறை |
4 | உதயம் | தோன்றுதல், பிறத்தல் எழுதல், காலை |
5 | உதரம் | |
6 | உதாசீனம் | புறக்கணிப்பு விருப்பு வெறுப்பு இன்மை அலட்சியம் |
7 | உதாரணம் | see எடுத்துக்காட்டு |
8 | உதிரம் | குருதி |
9 | உதிரி | (ஒன்றோடு ஒன்று இணையாமல்)தனித்தனியாக இருப்பது உதிர்ந்த பொருள் உதிர்ந்த நெல் பெரியம்மை சிறு கீரை பிட்டு செவ்வாழை |
10 | உத்சவம் | ஊருலா, ஊர் உலா |
11 | உத்தரம் | வடக்கு (வீடுகளில் கூரையைத் தாங்குவதற்காக) இரு பக்கச் சுவர்களை இணைத்துப் போடப்படும் நீண்ட மரக்கட்டை அல்லது இரும்புக் கிராதி (பாலம் போன்றவற்றில் ) சுமையைத் தாங்குவதற்காக இரண்டு தூண்களை இணைக்கும், சீமெந்தினால் ஆன இணைப்பு |
12 | உத்தரவாதம் | உறுதி பொறுப்பு |
13 | உத்தரவு | ஆணை அனுமதி |
14 | உத்தியோகபூர்வ | அரசமுறை |
15 | உத்தியோகப்பூர்வ | முறையான |
16 | உத்தியோகம் | அலுவல் |
17 | உத்தேசம் | குத்துமதிப்பு |
18 | உத்வேகம் | ஊக்கம் |
19 | உப | முக்கிய பகுதியாக அமையாதது, துணை, கிளை தலைமைக்கு அடுத்தபடியானதைக் குறிக்க உதவும் ஒரு சமஸ்கிருத உபசர்க்கம் (எ.கா – உபதலைவர்) |
20 | உபகரணம் | see துணைக்கருவி |
21 | உபகாரம் | (ஒருவருக்குச் செய்யும்) உதவி நன்மை |
22 | உபசாரம் | see பணிவிடை. |
23 | உபதேசம் | அறிவுரை நல்லுரை |
24 | உபதேசி | அறிவுறுத்துதல் (மந்திரம் )கற்றுத்தருதல் போதித்தல் |
25 | உபத்திரவம் | இடைஞ்சல் தொல்லை உடல் உபாதை துன்பம் தொந்தரை வேலைக்கு அல்லது நிம்மதிக்கு ஏற்படும் இடைஞ்சல் |
26 | உபத்திரவம் ,உவத்திரவம் | வேதனை |
27 | உபத்ரவம் | ஊறு தொந்தரவு |
28 | உபநயனம் | பூணூல் அணியும் சடங்கு |
29 | உபநியாசம் | பிரசங்கம் சொற்பொழிவு |
30 | உபந்நியாசம் | விரிவுரை/சமய சொற்பொழிவு |
31 | உபம் | இரண்டு |
32 | உபயம் | நன்றி இரண்டு அறச்சாலை அல்லது கோயிலுக்கு அளிக்கும் கொடை |
33 | உபயோகம் | பயன் |
34 | உபரி | see மிகை |
35 | உபவாசம் | நோன்பு |
36 | உபாயம் | வழி |
37 | உருசி ,ருசி | சுவை |
38 | உற்சவம் | விழா |
39 | உற்சாகம் | விறுவிறுப்பு,ஊக்கம் |
40 | உல்லாசம் | see உவகை |
41 | உவமானம் | உவமை |
42 | உஷார் | எச்சரிக்கை விழிப்பு |
43 | உஷ்ணம் | வெப்பம் |