எங்கும் நெல் – நாட்டுப்புற பாட்டு

142 0

களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 1

கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
கீழேபார்த்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 2

மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
மேலேபார்த்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 3

வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ
வாரிவாரி மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 4

தெற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
திரட்டித் திரட்டி மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 5

நாட்டியக் குதிரைபோல – ஏலங்கிடி லேலோ
நாலுகாதில் ம’த’க்குதையா – ஏலங்கிடி லேலோ 6

குள்ளiமாடும் புள்ளiமாடும் – ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 7

பால்கொடுக்கிற பசுவுங்கூட – ஏலங்க’டி லேலோ
பையப்பைய மித’iக்குதையா – ஏலங்கிடி லேலோ 8

பல்லுப்போடாத காளைக்கன்றும் – ஏலங்கிடி லேலோ
பால் மறந்த கிடாக்கன்றும் -ஏலங்கிடி லேலோ 9

பரந்துபரந்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா – ஏலங்கிடி லேலோ 10

எல்லாமாடும் சேர்ந்துதானும்- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா -ஏலங்கிடி லேலோ 11

கால்படவும் கதிருபூரா – ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா – ஏலங்கிடி லேலோ 12

நெல்லுவேறே வைக்கோல் வேறே- ஏலங்கிடி லேலோ
நல்லாஇருக்கு பார்க்கப்பார்க்க – ஏலங்கிடி லேலோ 13

வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் – ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா – ஏலங்கிடி லேலோ 14

ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும்- ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால் நெல்லு – ஏலங்கிடி லேலோ 15

அலங்கன் அலங்கிரெண்டுபேருக்கும் – ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக் கூலி -ஏலங்கிடி லேலோ 16

வண்டிவண்டியா நெல்லுத்தானும் -ஏலங்கிடி லேலோ
வருகுதையா அரண்மனைக்கு- ஏலங்கிடி லேலோ 17

அரண்மனைக் களஞ்சியம்பார்க்க- ஏலங்க’டி லேலோ
ஆயிரங்கண் வேணுமையா- ஏலங்க’டி லேலோ 18

புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும் – ஏலங்கிடி லேலோ
புள்ளைகளுக்கு வேகுதையா -ஏலங்கிடி லேலோ 19

வெள்ளiசெவ்வா வேளையிலே -ஏலங்கிடி லேலோ
வேகுதையா காய்கறியும்-ஏலங்கிடி லேலோ 20

கும்பல்கும்பலா நெல்லுத்தானும் – ஏலங்கிடி லேலோ
குலுமையெல்லாம் நிறைக்குதையா – ஏலங்கிடி லேலோ 21

தப்புநெல்லும் தவறுநெல்லும- ஏலங்கிடி லேலோ
தாராளமாக் கெடக்குதையா – ஏலங்கிடி லேலோ 22

கூனற்கிழவி கூடைமுறத்தை -ஏலங்கிடி லேலோ
கூனிக்கூனிக் கொண்டு போறாள் -ஏலங்கிடி லேலோ 23

கூட்டிப் பொறுக்கிக் கூடையை ரொப்பி- ஏலங்கிடி லேலோ
வீட்டுக்குப் போறா வேடிக்கையாதான் – ஏலங்கிடி லேலோ 24

சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலங்கிடி லேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு- ஏலங்கி’டி லேலோ 25

வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலங்கிடி லேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு – ஏலங்கிடி லேலோ 26

நாட்டுப்புற பாடல்கள் – தமிழ் DNA

எங்கும் நெல்

Related Post

ஆராரோ ஆரிரரோ-2

Posted by - ஏப்ரல் 16, 2020 0
ஆராரோ ஆரிரரோஆறு ரண்டும் காவேரி,காவேரி கரையிலயும்காசி பதம் பெற்றவனே!கண்ணே நீ கண்ணுறங்கு!கண்மணியே நீ உறங்கு!பச்சை இலுப்பை வெட்டி,பவளக்கால் தொட்டிலிட்டு,பவளக்கால் தொட்டிலிலேபாலகனே நீ உறங்கு!நானாட்ட நீ தூங்கு!நாகமரம் தேரோட!தேரு…

சந்தனத் தேவன் பெருமை – நாட்டுப்புற பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1 சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோசரியான பருத்திக்காடு – ஏலங்கிடி லேலோ 2 எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோஏழைக்கேற்ற குச்சுவீடு…

பொம்மை பார் – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
பொம்மை பொம்மை பொம்மை பார்புதிய புதிய பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார்தாளம் போடும் பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார்கண்ணை சிமிட்டும் பொம்மை…

ஆயர்பாடி மாளிகையில் – தாலாட்டுப் பாடல்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
ஆயர்பாடி மாளிகையில்தாய்மடியில் கன்றினைப் போல்மாயக்கண்ணன் தூங்குகின்றான்தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டுமண்டலத்தைக் காட்டியபின்ஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோஓய்வெடுத்து தூங்குகின்றான்ஆராரோ(ஆயர்பாடி…) பின்னலிட்ட கோபியரின்கன்னத்திலே கன்னமிட்டுமன்னவன் போல்லீலை செய்தான் தாலேலோஅந்த மந்திரத்தில் அவர்…

கைவீசம்மா கைவீசு – குழந்தை பாட்டு

Posted by - ஏப்ரல் 17, 2020 0
கைவீ சம்மா கைவீசுகடைக்குப் போகலாம் கைவீசுமிட்டாய் வாங்கலாம் கைவீசுமெதுவாய்த் தின்னலாம் கைவீசு அப்பம் வாங்கலாம் கைவீசுஅமர்ந்து தின்னலாம் கைவீசுபூந்தி வாங்கலாம் கைவீசுபொருந்தி யுண்ணலாம் கைவீசுபழங்கள் வாங்கலாம் கைவீசுபரிந்து…

உங்கள் கருத்தை இடுக...