எலும்புக்கூடுகளுடன் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியா

- 3

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (22.05.2020) எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு குறித்த எலும்புக்கூடுகள் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்களால் தகவல் வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பகுதி விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.


Read Full News @ வணக்கம் லண்டன்

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   Logo
   Register New Account
   Reset Password