தேவையானவை :
ஆட்டு எலும்பு – அரை கிலோ
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்த் துருவல் – கால் மூடி அரைக்கவும்
வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது)
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை :
1. ஆட்டெலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
2. எண்ணையைக் காய வைத்து சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
3. அடுத்து வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும், இதனுடன் எலும்பையும் சேர்த்து வதக்கவும்.
4. மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும்.
5. கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக வேக விடவும். உப்பை சரி பார்க்க வேண்டியது மிக முக்கியம்.
6. எலும்பிற்குப் பதிலாக காய்கறிகளைப் பொடியாக `கட்’ செய்து வைத்து இதே முறைப்படி சால்னா தயாரிக்கலாம்.