எளிய முறையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா? இந்த உதவும் 5 யோகாசனங்களை தினமும் செய்து வாருங்க
நமது உடலை நோயில்லாமல் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு யோகா பயிற்சிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
இதில் சில குறிப்பிட்ட ஆசனங்கள் நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊக்கம் கொடுக்கின்றன. உடலில் உள்ள நல்ல செல்களை அழிக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்களை எதிர்த்து யோகாசனங்கள் போரிடுகின்றன.
ஆகவே யோகா பயிற்சிகளைத் தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
வஜ்ராசனம் (Vajrasana)

5 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து வஜ்ராசனம் செய்தாலே நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். வஜ்ராசனம் செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தடையின்றி இரத்தம் செல்ல உதவுகிறது.
அதனால் கல்லீரல் தனது பணியை செவ்வனே செய்ய உதவுகிறது. மேலும் வஜ்ராசனம் நமது உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டையும் அமைதியாகவும் அதே நேரத்தில் நிலையாகவும் வைத்திருக்கிறது. அதனால் தேவையற்ற அழுத்தங்கள் நம்மை அண்டவிடாமல் காக்கிறது.
பத்த கோனாசனா (Baddha Konasana)

நமது இடுப்புகளுக்கு நெகிழ்வுதன்மையைக் கொடுப்பதோடு, நமது குடலுக்கு சீராக இரத்தம் செல்ல உதவுகிறது. யோகா பயிற்சிகளில் புதிதாக ஈடுபடுபவர்களுக்கு இந்த பத்த கோனாசனா ஆசனம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்த ஆசனம் முழுமையான ஆரோக்கியத்தையும் நல்குகிறது. குறிப்பாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் அவர்களின் செரிமான பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.
நவுக்காசனம் (Naukasana)

நமது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்துகிறது. நமது முக்கிய உடல் உறுப்புகளான கல்லீரல், கணையம் மற்றும் குடல் போன்றவற்றிற்கு ஆரோக்கியம் தருகிறது.
மேலும் நமது இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி, உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது.
உடலில் செரிமான அமைப்பு நன்றாக இருந்தால், அந்த உடல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்கும். நவுக்காசனம் நமது செரிமான அமைப்பையும் சீர்படுத்துகிறது.
திரிபாதசனம் (Tripadasana)
இந்த ஆசனம் நமது மூளையைத் தூண்டி நமது ஒருமுகப்படுத்தும் சக்தியை மேம்படுத்துகிறது.
அதனால் நம்மிடம் இருக்கும் அழுத்தங்கள் முழுமையாக மறைந்துவிடும். மேலும் இந்த ஆசனத்தைத் தவறாது செய்து வந்தால் அது நமது உடல் உறுப்புகளை வலுப்படுத்துவதோடு, நமது அழுத்தங்களையும் குறைத்து நம்மை புத்துணர்ச்சியோடு வாழ வைக்கும்.
பாதஹஸ்தாசனா (Padahastasana)

அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்யும் போது இந்த ஆசனம் செய்யப்படுகிறது. இந்த ஆசனம் செரிமான பிரச்சினைகளைக் களைகிறது.
இரத்த ஓட்டம் எளிதாக இருக்க உதவுகிறது. மேலும் நமது உடலை உற்சாகம் நிறைந்ததாகவும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்கிறது.
…
எளிய முறையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா? இந்த உதவும் 5 யோகாசனங்களை தினமும் செய்து வாருங்க Source link