ஒரே ஒரு SMS போதும்: உங்க பிஎப் கணக்கில் எவ்வளவு இருப்புத்தொகை இருக்குனு அறிந்து கொள்ளலாம்?

ஒரே ஒரு SMS போதும்: உங்க பிஎப் கணக்கில் எவ்வளவு இருப்புத்தொகை இருக்குனு அறிந்து கொள்ளலாம்?

பிஎப் இருப்புத்தொகை

அனைத்து அலுவலகத்திலும் பிஎப் இருப்புத்தொகைப் பிடிக்கப்படுகிறது. இவை ஒவ்வொரு சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்டதொகையை உங்கள் அலுவலகம் உங்கள் நலத்திட்டத்திற்க்காக ஒதிக்கிவைக்கும். வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது.

ஆன்லைனில் மிக எளிமையாக செக் செய்யலாம்

ஆன்லைனில் மிக எளிமையாக செக் செய்யலாம்

பிஎப் பொருத்தமாட்டில் உங்கள் இருப்புத்தொகையை ஆன்லைனில் மிக எளிமையாக செக் செய்யமுடியும். உலகமே இணையத்தின் வழியில் அதிவேகமாக பயணித்து கொண்டிருக்கின்றது. இன்று எல்லா வேலைகளையும் இணையம் வாயிலாக முடிக்க முடியும் என்ற நிலையில், பெரும்பாலான சேவைகளும் வர்த்தகங்களும் இணையத்தளம் மூலம் இயங்குகின்றது என்றே கூற வேண்டும்.

 PF அக்கவுண்டில் இருக்கும் பணம்

PF அக்கவுண்டில் இருக்கும் பணம்

பொதுவாக அவசர தேவை என்பது அனைவருக்கும் வரும் அப்போது நமக்கே தெரியாமல் நமது பெயரில் பணம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. PF அக்கவுண்டில் இருக்கும் பணத்தை பிற்காலத்தில் அதாவது வேலையில் இருந்து விடுபட்ட பிறகு தான் எடுக்க முடியும் என்ற கருத்து அனைவரிடமும் இருந்து வருகிறது.

இரண்டு தவனைகளாக வட்டி

இரண்டு தவனைகளாக வட்டி

2019-20 ஆம் நிதியாண்டிற்கான வட்டியை இரண்டு தவனைகளாக வருங்கால வைத்து நிதி அமைப்பு ஆறு கோடி உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் முதல் தவணையானது தீபாவளி வரை பங்குதாரர்களின் கணக்கில் வரவுவைக்கப்படலாம்.

இபிஎஃப்ஓ பிஎஃப் மீதான வட்டி

இபிஎஃப்ஓ பிஎஃப் மீதான வட்டி

இபிஎஃப்ஓ பிஎஃப் மீதான வட்டி 8.50 சதவீதமாக செலுத்த வேண்டும். முதல் தவணையாக 8.15 சதவீத வட்டியும் பின் 0.35 சதவீத வட்டியும் செலுத்தவர். இதுகுறித்த இபிஎஃப் உறுப்பினர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலின்படி இந்த முடிவு இன்னும் பேச்சுவார்த்தை கட்டத்திலே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அடடா எல்லாமே வாங்கலாமே- பிளிப்கார்ட், அமேசான் பண்டிகை தின விற்பனை ஒரே சமயத்தில்:போட்டிப்போட்டு சலுகை

எஸ்எம்எஸ் மூலம் இருப்புத் தொகை

எஸ்எம்எஸ் மூலம் இருப்புத் தொகை

எஸ்எம்எஸ் மூலம் இருப்புத் தொகையை கண்டறிவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். முன்னதாக தங்களது யுஏஎன் எண் இபிஎஃப்ஓ உடன் இணைக்கப்பட்டிருந்தால் இதுகுறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும்.

யுஏஎன் ஆக்டிவேஷன்

யுஏஎன் ஆக்டிவேஷன்

இபிஎஃப்ஓ என கூகுளில் டைப் செய்து தேடினால் அதில் யுஏஎன் ஆக்டிவேஷன் என காண்பிக்கப்படும். அதில் தங்களது யுஎன்எண் விவரங்களை பதிவிட்டுக் கொள்ள வேண்டும். பின் கேட்கப்படும் தகவலை மட்டும் பூர்த்தி செய்தால் போதுமானது. இதில் தங்களது மொபைல் எண், ஆதார் எண், வங்கி கணக்கு, பான் எண் போன்ற விவரங்களை அலுவலகத்தில் கொடுத்தப்படியே பதிவிட வேண்டும். குறிப்பாக ஆதார் எண்ணில் உள்ளிடப்பட்ட மொபைல் எண் கையில் இருத்தல் பிரதானம். முன்னதாக யுஏஎன் ஆக்டிவேட் செய்திருப்பவர்களுக்கு இது தேவையில்லை.

7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்

7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்

EPFOHO என டைப் செய்து 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தங்களுக்கான குறுஞ்செய்தி தகவல் கிடைக்கும். இந்த தகவல் இந்தி மொழியில் தேவைப்பட்டால், EPFOHO UAN ஐ எழுத்து மூலம் டைப் செய்து அனுப்ப வேண்டும். இந்த சேவை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கிறது. பிஎஃப் இருப்புக்கு, உங்கள் யுஏஎன் வங்கி கணக்கு, பான் மற்றும் ஆதார் உடன் இணைக்கப்படுவது அவசியம்.

பாஸ்புக் மூலமாக இருப்புத் தொகை

பாஸ்புக் மூலமாக இருப்புத் தொகை

அதே சமயத்தில் இபிஎப்ஓ இணையதளத்தில் உள்ள பாஸ்புக் மூலமாகவும் தங்களது இருப்புத் தொகையை சரிபார்க்கலாம். மேலும் ஒரு மிஸ்டு கால் மூலமாகவும் இருப்புத் தொகை குறித்த விவரங்களை அறி்ந்துக் கொள்ளலாம்.

இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்

இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்

011-22901406 என்ற எண்ணிற்கு இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அதாவது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணின் மூலம் மிஸ்டு கால் கொடுத்தால், பிஎஃப் விவரங்கள் இபிஎஃப்ஓ மூலம் அனுப்பப்படும். பிஎஃப் இருப்புத் தொகையை இதுபோன்று செய்வதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

ஒரே ஒரு SMS போதும்: உங்க பிஎப் கணக்கில் எவ்வளவு இருப்புத்தொகை இருக்குனு அறிந்து கொள்ளலாம்? Source link

Tags:

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: