ஒற்றை சிப்பும், அந்த கூலிங் ஃபேனும்… மேக்புக் சீரிஸில் என்ன ஸ்பெஷல்?! #AppleEvent #AppleM1

பெரும்பாலான தொழில்முறை பயன்பாட்டாளர்களின் ஃபேவரைட் லேப்டாப் மேக்புக்காகத்தான் இருக்கும். இந்த மேக்புக்குகளை மொத்தமாக அடுத்த லெவலுக்கு எடுத்துச்சென்றிருக்கிறது புதிய M1 புராசஸர் சிப். அப்படி இந்த குட்டி சிப்பில் என்ன ஸ்பெஷல்?

ஜூன் மாதம், மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்காக நடந்த ‘WWDC 2020’ நிகழ்வில் புதிய iOS, iPadOS, WatchOS, MacOs இயங்குதளங்களில் இருக்கும் வசதிகளை முதல்முறையாக உலகிற்குக் காட்டியது ஆப்பிள். இந்த நிகழ்வில் இன்னொரு சர்ப்ரைஸ் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது ஆப்பிள். ‘மேக் கணினிகளிலும் இனி ஐபோன், ஐபேட்களில் இருப்பது போல எங்களது சொந்த புராசஸர் சிப்களை பயன்படுத்தப் போகிறோம்’ என்று ஆப்பிள் அறிவித்ததுதான் அந்த சர்ப்ரைஸ். ARM கட்டமைப்பை கொண்ட புதிய சிப்பிற்கு (இவற்றை ‘ஆப்பிள் சிலிக்கன்’ என அழைக்கிறார்கள்) ஏற்றவாறு ஆப்களை எப்படி வடிவமைக்க வேண்டும் என மென்பொருள் வடிவமைப்பாளர்கள் சந்தேகங்கள் அனைத்துக்கும் அந்த நிகழ்வில் விளக்கம் அளித்திருந்தது ஆப்பிள். MacOS Big Sur புதிய சிப்புக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ‘இந்த வருடம் நிறைவடைவதற்குள் எங்களது சொந்த சிப்களை கொண்ட மேக் தயாரிப்புகளை அறிமுகம் செய்வோம்’ எனச் சொல்லியிருந்தது ஆப்பிள். அந்த அறிமுகம்தான் நேற்று நடந்தது.

2005 வரை ஆப்பிளின் மேக் கணினிகளில் IBM நிறுவனத்தின் PowerPC புராசஸர்கள்தான் பயன்படுத்தப்பட்டுவந்தன. அந்த வருடம் நடந்த WWDC நிகழ்வில்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் PowerPC-யிலிருந்து x86 இன்டெல் புராசஸர்களுக்கு மாறப்போகிறோம் என அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பின்னணியில் பல காரணங்கள் உண்டு. பர்ஃபாமென்ஸை விடவும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அப்போது விண்டோஸ் அளவுக்கு மேக் கணினிகளுக்கு நிறுவனங்கள் மென்பொருள் வடிவமைக்கவில்லை. அதனால் விண்டோஸ் கணினிகள் பயன்படுத்தும் x86 இன்டெல் ப்ராசஸர்களுக்கு மாறுவதன் மூலம் மேக் கணினிகளுக்கான மென்பொருள் வடிவமைப்பை எளிமையாக்க முடியும். ஒரு புராசஸரிலிருந்து அப்படியே வேறொரு கட்டமைப்பைக் கொண்ட புராசஸருக்கு மாறுவது என்பது மிகப்பெரிய வேலை. ஆனால் அதைச் செய்தது ஆப்பிள். அதற்கான பலனையும் அனுபவித்தது. நாள் போக்கில் தொழில்முறை பயன்பாட்டுக்கு அதிகம் பயன்படுத்தும் கணினிகளாக மேக் கணினிகள் உருவெடுத்தன. இப்போதும் அப்படியான ஒரு மாற்றம் அவசியம் எனக் கருதுகிறது ஆப்பிள்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: